கம்பராமாயணம் 2973 · ஆரணிய 6.16

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'எற்றுவாம் பிடித்து ஏந்தினம் 'என்குநர் ,
'பற்றுவாம் நெடும் பாசத்தின் 'என்குநர் ,
'முற்றுவாம் இறை சொல் முறையால் 'எனாச்
சுற்றினார் வரை சூழ்ந்தன்ன தோற்றத்தார் .

பொருள் · Meaning in Tamil

பிடித்து எற்றுவாம் - (இந்த மனிதர்களைப்) பிடித்து மோதுவோம்; (பிடித்து) ஏந்துதும் - (அவர்களைக் கையிலே பிடித்து ஏந்திக் கொள்வோம்; என்குநர் - என்று சொல்பவர்களும்; நெடும் பாசத்தின் - நீண்ட காலபாசம் என்னும் கயிற்றுச் சுருக்கால்; பற்றுவாம் என்குநர் - பிடித்துக் கட்டுவோம் என்று சொல்பவர்களும்; இறை சொல் முறையால் - நம் தலைவனான கரன் சொன்னவாறு; முற்றுவாம் எனா - அந்தச் செயலைச் செய்து முடிப்போம் என்றும் சொல்லி; வரை சூழ்ந்தன்ன தோற்றத்தார் - மலைகள் பல சூழ்ந்து நின்றாற் போன்ற தோற்றம் உடையவர்களாய்; சுற்றினார் - (இராமன் இருந்த இடத்தைக் சூழ்ந்து கொண்டார்கள்.

எற்றுவாம் பிடித்து ஏந்துதும் என்றது - பந்துகளைக் கொண்டு விளையாடுவது போல இராமலக்குவர்களை எற்றிப் பிடித்து ஏந்திப் போர் செய்வோம் என எளிதாகக் கருதிக் கூறியது.

பிடித்து : மத்திம தீபம் (நடுவில் இருந்து இரு பக்கமும் விளக்குகின்ற இடைநிலை விளக்கு).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some saying, "We will seize him and dash him down, we will catch him up,"
  2. some saying, "We will bind him with the long noose,"
  3. saying, "We will finish it as our lord commanded,"
  4. they surrounded him, looking like a ring of mountains.

What the poem says

The fourteen rākṣasas close in around Irāmaṉ like a ring of mountains, boasting as they come. Some say they will grab him and toss him about as if playing with a ball, others that they will tie him up with a noose, and all promise to carry out Karaṉ's orders.

They think the fight will be child's play.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eṟṟuvām piṭittu ēntutum 'eṉkunar,
'paṟṟuvām neṭum pācattiṉ 'eṉkunar,
'muṟṟuvām iṟai col muṟaiyāl 'eṉā
cuṟṟiṉār varai cūḻntaṉṉa tōṟṟattār.