கம்பராமாயணம் 2986 · ஆரணிய 6.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாசுணம் தலையில் தாங்கிய - (ஆதிசேடன் முதலான பாம்புகள் தலைமேற் கொண்டு சுமக்கின்ற; தாரணி நிலை நிலாது - பூமி (மிகுதியான பாரத்தைப் பொறுக்கமுடியாமல்) ஒரு நிலையில் நிற்க முடியாமல், முதுகை நெளிப்புற - (தன்) முதுகை நெளிக்கும்படி; உலைவு இல் ஏழ் உலகத்தினும் - அழிவில்லாத ஏழுலகங்களிலும்; ஓங்கிய மலை எலாம் - ஓங்கி வளர்ந்துள்ள மலைகள் யாவும், ஒரு மாடு தொக்கு என்ன - ஓரிடத்தில் வந்து சேர்ந்தாற் போலவும், ஏ - ஈற்றசை.
ஏழுலகத்து மலைகளும் ஒருங்கு திரண்டாற் போல அரக்கர்கள் அந்தப் போர்க்களத்தில் ஒருங்கே திரண்டனர் என்பது - தற்குறிப்பேற்ற வணி.
சராசரப் பொருள் அனைத்தையும் தரித்து நிற்பதால் பூமி தாரணி எனப்பட்டது. தேர்ப்படை மலைகளின் தொகுதிக்கு உவமை; அவை வலிமையும் பெருமையும் உயர்வும் பெற்றுள்ளமை பொதுத்தன்மை.
'கார்க் கருங்கடல் கால் கிளர்ந்தென்ன' (2899), 'அலகையின் ஆட' (2900), 'பொறியினிற கானெங்கும் வெங்கனல் பொங்க' (2901), 'இருள் திரண்டு வந்து ஈண்டிய தென்ன' (2902), 'மலையெலாம் ஒருமாடு வந்து தொக்கென்ன' (2903), 'தேரின் சேனை திரண்டது' (2898) எனத் தொகுத்துப் பொருள் முடிவு காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- as if, while the earth borne on the serpent's head
- could not hold steady and its back was bent and twisted,
- all the lofty mountains of the seven unperishing worlds
- had gathered together in one place.
What the poem says
The army's weight is so great that the earth, held up on the heads of the cosmic serpents, cannot stay steady and its back buckles. It is as if every mountain in the seven worlds had come together in one spot.
This verse ends a run of images, from the storm-tossed sea and the dancing ghouls to the forest fire and the darkness attacking the sun, that all describe how the chariot army massed.