கம்பராமாயணம் 3000 · ஆரணிய 6.43

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கழலினர் - (காலில்) வீரக் கழல் பூண்டவர்கள்; தாரினர் - மாலையை யணிந்தவர்கள்; கவச மார்பினர் - கவசம் தரித்த மார்பையுடையவர்கள்; நிழல் உறு பூணினர் - ஒளி மிகுந்த ஆபரணங்களையுடையவர்கள்; நெறித்த நெற்றியர் - கோபத்தால் மேலே நெறித்த நெற்றியையுடையவர்கள்; அழல் உறு குஞ்சியர் - நெருப்புப் போன்று சிவந்து அடர்ந்த தலைமயிரை யுடையவர்கள்; அமரை வேட்டு - போரினை விரும்பி; உவந்து எழல் உறு மனத்தினர் - உற்சாகங் கொண்டு எழுகின்ற மனத்தையுடையவர்கள்; ஒருமை எய்தினார் - (தமக்குள்) ஒற்றுமை பூண்டவர்கள்;

அழல் உறு - உறு; உவமவுருபு ஒருமை எய்தினார் - ஒன்று கூடினர் என்றும் போரில் ஒரே கருத்தைக் கொண்டனர் என்றும் கொள்ளலாம். நிழல் : ஒளி.

'போர் எனில் புகலும் புனைகழல் மறவர்' எனப் போர் என்றாலே விரும்புவோரும் வீரக்கழல் புனைந்தவரும் ஆகிய வீரரைப் புறநானூறு (31) குறிப்பதை இப் பாடல் நினைவுறுத்துகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Wearing warrior anklets and garlands, with armoured chests,
  2. with gleaming ornaments, with furrowed brows,
  3. with hair like fire, with hearts that rose rejoicing
  4. in desire for battle, they came together as one.

What the poem says

The description of the warriors ends: anklets of valour, garlands, armour, shining jewels, brows knotted in anger and hair red as flame.

Their hearts leap at the prospect of battle, and they move as one body with one purpose. The commentary recalls a line of the classical anthology Puṟanāṉūṟu about warriors whose joy is war.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaḻaliṉar, tāriṉar, kavaca mārpiṉar,
niḻaluṟu pūṇiṉar, neṟitta neṟṟiyar,
aḻaluṟu kuñciyar, amarai vēṭṭu uvantu
eḻaluṟu maṉattiṉar, orumai eytiṉār.