கம்பராமாயணம் 3002 · ஆரணிய 6.45

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குஞ்சரம் குதிரை - யானை, குதிரைகள்; பேய், குரங்கு - பேய்கள், குரங்குகள்; கோள் அரி - வலிய சிங்கம்; வெம் சினக் கரடி - கொடிய கோபமுடைய கரடி; நாய், வேங்கை - நாய்கள், புலிகள்; யாளி என்று - யாளிகள் என்னும் இவற்றின் முகவடிவங்களாக; அஞ்சுற - காண்பவர் அஞ்சும்படி; கனல் புரை முகத்தர் - நெருப்பைப் போன்ற முகத்தையுடையவர்களாக; ஆர்கலி நஞ்சு தொக்கு எனப் புரை - பாற்கடலில் தோன்றிய நஞ்சு திரண்டது போல விளங்கும், நயனத்தார்கள் - கண்களையுடையவர்கள்;

இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடராக இயைந்து முற்றுப் பெறும். அந்த அரக்கர் யானை முதலாகப் பல கொடிய மிருகங்களின் முகங்களையுடையவர்கள்; அன்னவரின் முகங்கள் கனல் போலவும் கண்கள், ஆலகால நஞ்சு திரண்டு வந்தது போலவும் கொடுமை அமையப் பெற்றன. ஆர்கலி நஞ்சு தொக்கென நயனம் : ஆர்கலி அரக்கர்களின் உருவத்தினது கருமைக்கும் பெருமைக்கும் நஞ்சு அவர்களுடைய கண்களின் கொடுமைக்கும் உவமைகள் ஆயின. ஆலகால நஞ்செலாம் கூடி வந்தது போன்ற கண்கள் என்றது, அச்சுறுத்தலுக்கும் கொடுமைக்கும் உவமையாயிற்று. 'புரை உயர்பாகும் என்ற நூற்பாவை நினைத்தால் நஞ்சு தொகுத்தது போலக் கொடுமையால் உயர்ந்த நயனங்கள் எனப் பொருள் கொள்ளலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some with faces of elephant, horse, demon, monkey, mighty lion,
  2. fiercely angry bear, dog, tiger and yāḷi,
  3. faces like fire that strike terror, and eyes
  4. like the poison of the roaring sea gathered together;

What the poem says

Many of the rākṣasas have the heads of animals: elephants, horses, demons, monkeys, lions, savage bears, dogs, tigers and yāḷis. Their faces glow like fire.

Their eyes look like all the poison that rose from the churned ocean gathered into one. The sentence runs on into the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuñcaram kutirai pēy kuraṅku kōḷ ari
veñ ciṉak karaṭi nāy vēṅkai yāḷi eṉṟu
añcuṟak kaṉal purai mukattar, ārkali
nañcu tokkeṉap purai nayaṉattārkaḷum.