கம்பராமாயணம் 3018 · ஆரணிய 6.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வீரனே - வீரனே; நெறி கொள் மாதவர்க்கு - தவவொழுக்கத்தைக் கடைப் பிடிக்கும் தவ முனிவர்களுக்கு; முன்னே நேர்ந்தனென் - முன்னமே நான் உடன்பட்டு; யானே நிருதர் ஆவி பறிக்குவென் - நானே அரக்கர்களின் உயிரைக் கவர்வேன்; என்னும் பழமொழி - என்று உறுதிமொழி கூறிய பழைய வார்த்தை; பழுதுறாமே - வீண் போகாதவாறு; இக் குழுவை இன்னே கொல்வேன் - இந்த அரக்கர் கூட்டத்தை இப்பொழுதே கொல்வேன்; வெறி கொள் பூங் குழலினாளை - மணங்கமழும் பூக்களைச் சூடின கூந்தலையுடைய சீதையை; குறிக்கொடு காத்தி - நீ கருத்தோடு காப்பாய்; யான் வேண்டினேன் - நான் உன்னை இது வேண்டினேன்; என்னா - என்று (இராமன் இலக்குவனிடம்) சொல்லி.....,
'புட்டில் கட்டிச் சாபமும் தரித்தான்' என வரும் அடுத்த செய்யுளோடு தொடரும். அரக்கர்களுக்கு அஞ்சிச் சரணடைந்த தண்டகாரணிய முனிவர்களுக்கு இராமன் அபயமளித்தது அகத்தியப் படலத்தில் கூறப்பெற்றது. குறிக் கொள்ளுதல் - உன்னிப்பாய்ப் பார்த்துக்கொள்ளுதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "So that my old promise does not fail, the word I gave earlier to the great ascetics who keep their path,
- 'I myself will tear out the lives of the nirutas,'
- I ask you, hero, guard with all your care
- her of fragrant flowered tresses; I will kill this horde right now," he said.
What the poem says
Irāmaṉ refuses Ilakkuvaṉ's offer. He reminds him that he gave his word to the sages of the forest that he himself would take the lives of the rākṣasas, and that promise must not be broken.
So he asks Ilakkuvaṉ to guard Cītai carefully while he kills this horde at once. The sentence continues into the next verse.