கம்பராமாயணம் 3017 · ஆரணிய 6.60

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மின் நின்ற சிலையன் - மின்னல் போன்று ஒளி பொருந்திய வில்லைத் தாங்கியவனும், வீரக் கவசத்தன் - அழியாத வலிமை வாய்ந்த கவசத்தையுடையவனும்; விசித்த வாளன் - (இடையில்) கட்டிய உடைவாளையுடையவனும்; பொன் நின்ற - அழகு பொருந்திய; வடிம்பின் வாளிப் புட்டிலன் - நுனியுள்ள அம்புகளைக் கொண்ட அம்பறாத் தூணியையுடையவனும்; புகையும் நெஞ்சன் - கோபத் தீ மூண்ட மனமுடையவனுமாய் (இராமனை நோக்கி); நில் - (போர் தொடங்காது) நில்; நின்று - (அப்படி) நின்று; யான் செய் நிலை - நான் செய்யக் கூடிய போரின் திறமையை, 'காண்டி' என - காண்பாய் என்று சொல்லி, விரும்பி - (போர் செய்ய) விருப்பங் கொண்டு; நேரா - போருக்கு ஆயத்தமாக; முன் நின்ற - (தனக்கு) முன்னே வந்து நின்ற; பின் வந்தோனை - (தன்) தம்பியான இலக்குவனை; நோக்கினன் - பார்த்து; மொழியல் உற்றான் - (இராமன்) சொல்லத் தொடங்கினான்.

வனத்திலே கொடிய அரக்கர்களாலும், கொடிய மிருகங்களாலும் தன் தமையனுக்கும், அவன் மனைவிக்கும் என்றேனும் ஏதேனும் தீங்கு நேருமோ என்று சந்தேகித்து இலக்குவன் எப்பொழுதும் விழிப்போடு வில்லேந்தித் தூணி தாங்கிக் கவசம் தரித்து வாள் கட்டிப் போருக்குச் சித்தனாக நிற்பவன். அவ்வாறு நின்ற அவன் இப்போது போர் வருவது தெரிந்தவுடனே பின்னும் போர் முயற்சியை மேற்கொள்கிறான் என்பது.

மின்நின்ற சிலை : இல்பொருளுவமை. விரும்பி நேரா - போர் செய்ய விரும்பி

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With a bow that flashed like lightning, in warrior's armour, sword belted on,
  2. with a quiver of arrows with beautiful tips, his heart smouldering,
  3. eager, saying, "Wait, stand and watch what I will do," he stood ready;
  4. Irāmaṉ looked at him, the younger one who stood before him, and began to speak.

What the poem says

Ilakkuvaṉ, always on guard in the forest against harm to his brother and Cītai, is already armed: bow flashing like lightning, armour on, sword at his hip, quiver full. He is burning to fight.

He steps in front of Irāmaṉ and says, Hold back and watch what I can do. Irāmaṉ looks at him and begins to reply.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1miṉ niṉṟa cilaiyaṉ vīrak kavacattaṉ vicitta vāḷaṉ
poṉ niṉṟa vaṭimpiṉ vāḷip puṭṭilaṉ pukaiyum neñcaṉ,
'nil; niṉṟu kāṇṭi; yāṉ cey nilai;' eṉa virumpi nērā
muṉ niṉṟa piṉ vantōṉai nōkkiṉaṉ, moḻiyaluṟṟāṉ.