கம்பராமாயணம் 3016 · ஆரணிய 6.59
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தூளியின் படலை - தூசியின் தொகுதி; வந்து தொடர்வு உற - முன்னே வந்து படியவும்; மரமும் தூறும் - (அக் காட்டிலிருந்த) மரங்களும் புதர்களும்; தாள் இடை ஒடியும் ஓசை - வரும் அரக்க வீரர்களின் கால்களில் அகப்பட்டு ஒடிவதால் உண்டாகிய ஓசை; 'சடசட' ஒலிப்ப - சடசடவென்று ஒலிக்கவும்; கானத்து ஆளியும் - காட்டிலுள்ள யாளிகளும்; அரியும் - சிங்கங்களும்; அஞ்சி இரிதரும் - பயந்து நிலைகெட்டு ஓடுகின்ற; அமலை நோக்கி - பேராரவாரத்தைப் பார்த்து; மீளி மொய்ம்பினரும் - வலிய தோள்களையுடைய இராமலக்குவரும்; சேனை மேல் வந்தது உளது என்று உன்னா - அரக்கர் சேனை தம்மோடு போருக்கு வந்துள்ளது என்று எண்ணி.
உன்னா என்னும் செயவென் எச்சம் அடுத்த செய்யுளிலுள்ள மொழியலுற்றான் என்ற வினை கொண்டு முடியும். படலை - கூட்டம், தொகுதி; அமலை - பேரொலி. சடசட - ஒலிக்குறிப்பு.
தூளியின் தொகுதியும், சடசட ஒலியும், ஆளியும் சிங்கமும் அஞ்சியோடும் ஆரவாரமும் நோக்கி மீளி மொய்ம்பினரான இராமலக்குவரும் அரக்கர் சேனை போர் செய்ய வந்துள்ளது என்று எண்ணினர் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the cloud of dust came rolling on, and the sound of trees and bushes
- snapping under their feet crackled and crashed,
- seeing the uproar as the yāḷis and lions of the forest fled in fear,
- the two of mighty shoulders thought, "An army has come against us."
What the poem says
The first clouds of dust arrive, trees and bushes crack and crash under the marching feet, and even yāḷis and lions flee in terror.
Seeing and hearing all this, the two mighty brothers realise that an army has come to fight them. The sentence carries on into the next verse, where Irāmaṉ speaks.