கம்பராமாயணம் 3015 · ஆரணிய 6.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
புள்ளொடு விலங்கும் - அந்த வனத்திலுள்ள பறவைகளும் மிருகங்களும்; வாய் புலர்ந்து அழிந்த - (அச் சேனையைக் கண்டு அஞ்சியதால்) வாய் உலர்ந்து மனநிலை கெட்டனவும்; மெய்யின் வருத்தத்த - உடம்பில் வருத்தம் உடையனவும்; வழியில் யாண்டும் ஓய்வு இல - இடை வழியில் எங்கும் தங்கி இளைப்பாறாதனவும்; நிமிர்ந்து வீங்கும் உயிர்ப்பின - அண்ணாந்து பார்த்துப் பெருமூச்சு விடுவனவும்; உலைந்த கண்ண - பார்வை மழுங்கிய கண்களையுடையனவுமாகி; தீயவர் சேனை வந்து சேர்ந்தமை - (ஓடிவந்து) கொடிய அந்த அரக்கர் சேனை வந்து சேர்ந்த செய்தியை; தெரிந்து - தாம் அறிந்து, சென்று தெரிய உரைப்ப - முன் வந்து இராமலக்குவர் அறியும் படி செய்தி கூறுபவரான; வேய் போன்ற - ஒற்றர்களை ஒத்தன.
அம்மா - ஈற்றசை; வியப்பிடைச் சொல்லுமாம். பறவைகளும் மிருகங்களும் மிகவும் அஞ்சி நிலைகெட்டுத் தரிப்பின்றி அரக்கர் சேனை வருவதற்கு முன்பே இராமபிரான் வீற்றிருந்த பர்ணசாலையை நோக்கி விரைந்தோடி வந்தன, அரக்கர் சேனை வருவதையறிவதற்குக் காரணமாயிற்று என்பது. அந்தப் பறவை விலங்குகளை வந்து செய்தி கூறும் ஒற்றர் போன்றன என்றார். தன்மைத் தற்குறிப்பேற்றவணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Mouths parched and spent, bodies aching,
- never resting anywhere along the way, breath heaving
- with heads raised, eyes dimmed,
- the birds and beasts were like spies who had learned that the army of the wicked had come and ran to tell it, behold!
What the poem says
Ahead of the army, the birds and animals of the forest rush to Irāmaṉ's hut, mouths dry with fear, bodies aching, panting and wild-eyed, never stopping to rest.
They seem like scouts who have spotted the enemy and raced back to report, and indeed their panic is what warns the brothers that the army is coming.