கம்பராமாயணம் 3014 · ஆரணிய 6.57

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தூரியக் குரலின் வானின் முகில் குலம் துணுக்கம் கொள்ள ,
வார் சிலை ஒலியின் அஞ்சி , உருமெலாம் மறுக்கம் கொள்ள
ஆர்கலி ஆர்ப்பின் உட்கி , அசைவு உற , அரக்கர் சேனை ,
போர் வனத்து இருந்த வீரர் உறைவிடம் புக்கது அன்றே .

பொருள் · Meaning in Tamil

தூரியக் குரலின் - வாத்தியங்களின் முழக்கத்தால்; வானின் முகிற் கணம் - ஆகாயத்திலுள்ள மேகக் கூட்டங்கள்; துணுக்கம் கொள்ள - அஞ்சி நடுக்கம் அடையவும்; வார்சிலை ஒலியின் - நீண்ட விற்களின் நாணொலியால்; உரும் எலாம் அஞ்சி - இடிகளெல்லாம் பயந்து; மறுக்கம் கொள்ள - கலக்கமடையவும்; ஆர்ப்பின் - (கர்ச்சனை முதலிய) ஆரவாரத்தால்; ஆர்கலி உட்கி அசைவு உற - கடல்களும் அஞ்சி நடுக்கமுறவும்; அரக்கர் சேனை - இராக்கதச் சேனை; அன்றே - அப்பொழுதே; வனத்து இருந்த போர் வீரர் உறைவிடம் - அந்தக் காட்டில் தங்கியிருந்த போரில் வல்ல வீரர்களான (இராமலக்குவர்) வசிக்கும் இடத்தை, புக்கது - போய் அடைந்தது. தூரியங்களாகிய வாத்தியங்களின் ஒலியும் சிலையின் நாணொலியும் மிகுந்து தோன்ற அரக்கச் சேனை ஆரவாரம் செய்து கொண்டு இராமலக்குவர் இருந்த இடத்தைச் சென்றடைந்தது என்பது, - தொடர்புயர்வு நவிற்சியணி. அன்று, ஏ - அசையுமாம்.

சேனை முழக்கத்திற்கு மேகம், கடல் இவற்றின் முழக்கங்கள் உவமையாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the clouds in the sky shook at the sound of the trumpets,
  2. as all the thunderbolts, afraid of the twang of the long bows, were thrown into confusion,
  3. as the sea trembled in fear at their roar, the rākṣasa army
  4. reached the dwelling of the heroes who lived in the forest.

What the poem says

The rākṣasa army arrives at the brothers' hermitage. Its trumpets are louder than thunderclouds, so the clouds tremble; the twang of its bowstrings frightens the thunderbolts; its war cries make the ocean shake.

The ordinary images for a great noise, cloud, thunder and sea, are here outdone by the army itself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tūriyak kuraliṉ vāṉiṉ mukiṟ kaṇam tuṇukkamkoḷḷa,
vār cilai oliyiṉ añci, urum elām maṟukkamkoḷḷa
ārkali ārppiṉ uṭki, acaivuṟa, arakkar cēṉai,
pōr vaṉattu irunta vīrar uṟaiviṭam pukkatu aṉṟē.