கம்பராமாயணம் 3013 · ஆரணிய 6.56

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாயா - அழியாத; பந்த மா வினையம் மாள - பிணிப்பாகிய பெரிய கருமங்களையழிக்கும்படி; பற்று அறு - உலகப் பற்று நீங்கிய; பெற்றியோர்க்கும் - உயர்ந்த ஞானியர்களுக்கும்; உந்த அரு நிலையது ஆகி - விலக்க முடியாத நிலையுடையதாய்; உடன் உறைந்து - உடம்போடு பொருந்தியிருந்து; உயிர்கள் தம்மை - எல்லா உயிர்களையும்; அந்தகற்கு அளிக்கும் - யமனுக்குக் கொடுக்கின்ற (கொன்றொழிக்கின்ற); நோய் போல் - வியாதி போல; அரக்கி முன்னாக - அரக்கியான சூர்ப்பணகை முன்னே செல்ல; சேனை வெள்ளம் - அந்த இராக்கதச் சேனைப் பெருக்கு; வள்ளியோன் மருங்கு - வள்ளலாகிய இராமபிரான் அருகே; வந்தது - வந்து சேர்ந்தது.

அம்மா; ஈற்றசை வியப்பிடைச் சொல்லும் ஆம். சூர்ப்பணகை, தன்னோடு பிறந்த கரன் முதலிய அரக்கர்களுக்கும் இது காரணமாக இராவணன் முதலோர்க்கும் அழிவுக்குக் காரணமாய் இருந்தாளாதலால் அவளுக்கு உயிர்களை யமனுக்கு அளிக்கும் நோய் உவமையாயிற்று. அரக்கர்கள் உயிர்களுக்கும், சூர்ப்பணகை நோய்க்கும், இராமபிரான் யமனுக்கும் உவமைகள்.

பந்தமா வினை - உயிரைக் கட்டுப்படுத்தும் பெரிய கருமம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The flood of the army came to the side of the generous one; like a disease
  2. that, so that the great binding deeds which never die may perish, even for those free of attachment
  3. cannot be driven off, but dwells with the body and hands living beings
  4. over to Death, with the rākṣasī leading the way, behold!

What the poem says

The flood of soldiers reaches Irāmaṉ with Cūrppaṇakai at its head. She is like a disease that lives inside the body and hands living beings over to Death, a disease that not even sages free of all attachment can escape, since the body must end for their karma to end.

The image fits: she is the cause of death first for Karaṉ and his army, and in the end for Irāvaṇaṉ and his race. The rākṣasas are the living beings and Irāmaṉ is Death.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vantatu cēṉai veḷḷam vaḷḷiyōṉ maruṅku; māyā
panta mā viṉaiyam māḷap paṟṟu aṟu peṟṟiyōrkkum
unta aru nilaiyatu āki, uṭaṉ uṟaintu, uyirkaḷtammai
antakaṟku aḷikkum nōypōl arakki muṉ āka, ammā!