கம்பராமாயணம் 3012 · ஆரணிய 6.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நிலமிசை - தரையின் மீதும்; விசும்பு இடை - ஆகாயத்தின் மேலும்; நெருக்கலால் - (இடைவெளியில்லாமல்) நெருக்க முண்டானதால்; கொலை மிசை நஞ்சு என - போரில் கொல்லுதலை மேற்கொண்டுவிடத்தைப் போன்று; கொதிக்கும் நெஞ்சினார் - கொதிக்கின்ற மனமுடைய கொடிய அரக்கர்; நெடு மலைமிசை - உயர்ந்த மலைகளின் மேல்; மலை இனம் வருவபோல் - வேறு மலைக் கூட்டங்கள் ஏறி வருவன போல; மலைத் தலைமிசைத் தலைமிசை - மலைகளின் சிகரங்கள் தோறும்; தாவிச் சென்றனர் - (கால் வைத்துத்) தாண்டிக்கொண்டு சென்றார்கள்.
பூமியிலும் வானத்திலும் சேனைகள் நெருங்கி வெற்றிடமில்லாமல் ஆக்கியதால் பல அரக்கர்கள் மலைகளின் மேலே பாய்ந்து நடந்து போயினர் என்பது அவர்களுக்கு மலை மேல் மலை வருவதை இல்பொருள் உவமையாகக் கூறினார். வருவ; பெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because the ground and the sky were crammed full, over the tall
- mountains, like herds of mountains coming on,
- they went leaping from peak to peak of the hills,
- those whose hearts seethed like poison bent on killing.
What the poem says
The ground and even the sky are so packed with troops that there is no room left, so many of the rākṣasas, hearts seething like deadly poison, stride along the mountaintops, leaping from peak to peak.
It looks as though mountains were walking over mountains, an image of something that could never really happen.