கம்பராமாயணம் 3011 · ஆரணிய 6.54

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சினம் தொகு - கோபம் மிக்க; நெடுங் கடல் சேனை - பெரிய கடல் போன்ற அந்த அரக்கர் சேனைகள்; செல்ல - புறப்பட்டபோது; இனம் தொகு தூளியால் - கூட்டமாகத் திரண்டெழுந்த தூசியால்; வனம் துகள் பட்டன - காடுகளெங்கும் புழுதி படிந்தன; வான் உயர் மலையின் - வானோங்கி யுயர்ந்த மலைகளின் மேல், கனம் துகள் பட்டன - படிந்திருந்த மேகங்களும் அத் தூசியால் மூடப்பட்டன; கடல்கள் தூர்ந்தன - கடல்களும் தூர்ந்துபோயின; இனி இசைப்பது என்? - இனிச் சொல்ல வேண்டுவது என்ன உள்ளது?; ஏ - ஈற்றசை.

சேனைகள் எழுப்பிய புழுதி வனம் முழுதும் தூளிமயமாக்கியதுமல்லாமல் வானத்து மேகங்களையும் தூளியாக்கியது; கடலிலும் நிரம்பித் தூர்த்தது. தொடர்புயர்வு நவிற்சியணி.

சேனையைக் கடல் என்றது அதன் மிகுதி நோக்கி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The forests were covered in dust; the clouds on the sky-high mountains
  2. were covered in dust; the seas were filled up;
  3. with the dust the multitude raised, what more is there to say,
  4. as that long sea of an army, massed in anger, marched on?

What the poem says

As the furious army, vast as the sea, marches out, its dust coats the forests, buries the clouds resting on the mountaintops, and even fills up the oceans.

The poet throws up his hands: what more can be said? The exaggeration conveys the army's enormous size.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṉam tukaḷpaṭṭaṉa; malaiyiṉ vāṉ uyar
kaṉam tukaḷpaṭṭaṉa; kaṭalkaḷ tūrntaṉa;
iṉam toku tūḷiyāl, icaippatu eṉ? iṉi
ciṉam toku neṭuṅ kaṭaṟ cēṉai cellavē.