கம்பராமாயணம் 3010 · ஆரணிய 6.53

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அசும்பு உறு மத கரி , புரவி , ஆடகத்
தசும்பு உறு சயந்தனம் , அரக்கர் , தாள் தர
விசும்பு உறு தூளியான் வெண்மை மேயின
பசும் பரி பகலவன் பைம்பொன் தேர் அரோ .

பொருள் · Meaning in Tamil

அசும்பு உறு மதகரி - நீரூற்றைப் போன்று (இடைவிடாது) பெருகுகின்ற மதநீரையுடைய யானைகளும்; புரவி - குதிரைகளும்; ஆடகத் தசும்பு உறு சயந்தனம் - பொன்னாலான கலசத்தையுடைய தேர்களும்; அரக்கர் தாள் தர - அரக்கர்களும் (ஆகிய நால்வகைச் சேனைகளும்) கால்களை வைத்து நடந்தமையால்; விசும்பு உறு தூளியால் - (மேலெழுந்து) வானத்தில் போய்ப் படிந்த புழுதிகளால்; பகலவன் - சூரியனுடைய; பசும் பரி - (தேரில் பூண்ட) பச்சைக் குதிரைகளும்; பைம்பொன் தேர் - பசும் பொன்னிறமான தேரும்; வெண்மை மேயின - வெண்ணிறத்தை யடைந்தன; அரோ - ஈற்றசை.

நால்வகைச் சேனைகள் எழுப்பிய வெண் புழுதி மிகப் படிவதால் கதிரவனின் பசும் பொன் தேரும், அதில் பூட்டப் பெற்ற பச்சைக் குதிரைகளும் வெண்ணிறமடைந்தன என்பது. இதனால் மேலெழுந்த புழுதியின் மிகுதி தொனிக்கும். அசும்பு - ஊற்று. சூரியனின் தேர்க் குதிரைகள் ஏழு; அவை பசுமை நிறமுடையவை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As rutting elephants streaming like springs, horses,
  2. chariots with golden finials, and rākṣasas tramped along,
  3. the dust that rose to the sky turned white
  4. the green horses and the fine gold chariot of the sun.

What the poem says

All four arms of the army, elephants streaming with musk, horses, chariots topped with golden finials, and foot soldiers, march so heavily that their dust rises right up to the sun.

It settles so thick that the sun's seven green horses and his golden chariot are turned white.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1acumpuṟu mata kari, puravi, āṭakat
tacumpuṟu cayantaṉam, arakkar, tāḷ tara
vicumpuṟu tūḷiyāl veṇmai mēyiṉa
pacum pari pakalavaṉ paimpoṉ tēr arō.