கம்பராமாயணம் 3009 · ஆரணிய 6.52

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆன்று அமை - நிறைந்து விளங்கிய; எறிபடை - பகைவர்களைத் தாக்கவல்ல சேனைகளாகிய, அழுவத்து ஆர்கலி - மிக்க பரப்பையுடைய கடல்; வான் தொடர் மேருவை - ஆகாயத்தையளாவிய மேருமலையை; வளைத்ததாம் என - வளைத்துக் கொண்டது போல; ஊன்றின தேரினன் - (தன்னைச் சூழ நடுவில்) நிலை நிறுத்திய தன் தேரையுடையவனும்; உயர்ந்த தோளினன் - உயர்ந்த தோள்களையுடையவனுமாய்; யாவரும் துணுக்கம் எய்த - எல்லோரும் அஞ்சி நடுங்கும்படி; தோன்றினன் - போர்க்களத்திலே (கரன்) வந்து தோன்றினான். கடல், மேருவை வளைத்தது போலத் தூடணன் முதலிய அரக்கச் சேனையர் கரனைச் சூழ நின்றனர். மேரு கரனுக்கு உவமை; உருவகத்தை அங்கமாகக் கொண்டு வந்த உவமையணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if the wide roaring sea of the vast, striking army
  2. had ringed round Mount Mēru that reaches the sky,
  3. he with his chariot planted firm, he with towering shoulders,
  4. appeared, so that all were struck with dread.

What the poem says

Karaṉ himself now appears on the battlefield, his chariot planted in the middle of his forces and his huge shoulders towering above them, and everyone trembles.

His army surrounds him like the ocean encircling Mount Mēru, which touches the sky: the sea is the army and the mountain is Karaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṉṟu amai eṟi paṭai aḻuvattu, ārkali
vāṉ toṭar mēruvai vaḷaittatām eṉa,
ūṉṟiṉa tēriṉaṉ, uyarnta tōḷiṉaṉ,
tōṉṟiṉaṉ; yāvarum tuṇukkam eytavē.