கம்பராமாயணம் 3008 · ஆரணிய 6.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உயிர் கவர் - வீரர்களின் உயிரை (உடம்பிலிருந்து) எடுக்கவல்ல; அலங்கல் வேலினர் - வெற்றி மாலை சூடிய; பாடவநிலையினர் - திறமை வாய்ந்த நிலையுடையவர்களுமாகிய, தூடணன் - தூடணன்; திரிசிராத் தோன்றல் - திரிசிரசு என்னும் வீரன்; ஆதியர் - முதலிய தலைவர்களை முன்னிட்டவரான; பலரும் - சேனைத் தலைவர் பலரும்; கோடணை முரசு இனம் குளிறு சேனையர் - ஆரவாரத்தையுடைய பேரிகை வாத்தியங்கள் முழங்குகின்ற சேனைகளையுடையவர்களாய்; சுற்றினர் - (கரனை) வந்து சூழ்ந்தார்கள்
தூடணன் முதலான பெருஞ் சேனைத் தலைவர்கள் தங்கள் சேனையோடு வந்து கரனுக்கு உதவுவதற்காகக் கரனைச் சூழ்ந்து கொண்டார்கள் என்பது செய்தி.
தூடணன் - யாவரையும் நிந்திப்பவன்; திரிசிரா மூன்று தலைகளையுடையவன்; வடமொழிப் பெயர்கள். தோன்றல் - ஆண்மையில் சிறந்தவன்; கோடணை - கோஷணம்; ஆரவாரம்; பாடவம் - திறமை; குளிறுதல் - பேரொலி செய்தல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Tūṭaṇaṉ, the hero Tiricirā and others,
- with armies where droves of war drums thundered,
- with garlanded spears that take the lives of men,
- skilled and steady, many of them, gathered round.
What the poem says
The great generals Tūṭaṇaṉ and the three-headed Tiricirā, with many others, gather around Karaṉ with their armies to support him, their war drums thundering.
Their garlanded spears have taken many warriors' lives. The names are Sanskrit: Tūṭaṇaṉ, Dūṣaṇa, means the reviler, and Tiricirā, Triśiras, means three-headed.