கம்பராமாயணம் 3007 · ஆரணிய 6.50

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வில்லினர் , வாளினர் , இதழின்மீது இடு
பல்லினர் , மேருவைப் பறிக்கும் ஆற்றலர் ,
புல்லினர் , திசைதொறும் ; புரவித் தேரினர்
சொல்லின முடிக்குறும் துணிவின் நெஞ்சினார் .

பொருள் · Meaning in Tamil

வில்லினர் - வில்லையுடையவர்களும்; வாளினர் - உடை வாளையுடையவர்களும்; இதழின் மீது இடும் பல்லினர் - உதடுகளின் மேல் வைத்து ஊன்றும் பற்களையுடையவர்களும், மேருவை பறிக்கும் ஆற்றலர் - மகா மேருமலையையும் பறித்தெடுக்கக் கூடிய வல்லமையுடையவர்களும், புரவித் தேரினர் - குதிரைகள் பூட்டப் பெற்ற தேரினையுடையவர்கள்; சொல்லின முடிக்குறும் - (தாம்) சொல்லியவற்றைச் சொன்னவாறே செய்து முடிக்கவல்ல; துணிவின் நெஞ்சினர் - வலிமையுள்ள மனமுடையவர்களுமான அவர்கள்; திசை தொறும் புல்லினர் - எல்லாத் திக்குகளிலும் வந்து சூழ்ந்து நின்றார்கள்.

இதழின் மீதிடும் பல்லினர் என்பது சினத்தின் மெய்ப்பாடு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With bows, with swords, with teeth pressed down
  2. on their lips, with strength to uproot Mount Mēru,
  3. they closed in from every direction; riding horse-drawn chariots,
  4. with resolute hearts that carry out whatever they say.

What the poem says

The commanders, armed with bows and swords, bite their lips in rage, a classic sign of anger. They are strong enough to tear up Mount Mēru, the axis of the world.

Riding horse-drawn chariots and always as good as their word, they take up positions on every side.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1villiṉar, vāḷiṉar, itaḻiṉ mītu iṭum
palliṉar, mēruvaip paṟikkum āṟṟalar,
pulliṉar, ticaitoṟum; puravit tēriṉar
colliṉa muṭikkuṟum tuṇiviṉ neñciṉār.