கம்பராமாயணம் 3006 · ஆரணிய 6.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எழுவரோடு எழுவர் ஆம் தலைவர் - பதினால்வராகிய அந்தச் சேனைத் தலைவர்கள்; உலகம் ஏழொடு ஏழ் தழுவிய வென்றியர் - பதினான்கு உலகங்களிலும் பொருந்திய வெற்றியையுடையவர்கள், தானையர் - பெரும்படையுடையவர்கள்; மழுவினர் - மழுவையுடையவர்கள்; வாளினர் - வாளைத் தாங்கியவர்கள்; வயங்கு சூலத்தர் - விளங்கும் சூலத்தையுடையவர்கள்; உழுவையோடு அரி என - புலியும் சிங்கமும் போல; உடற்றும் சீற்றத்தார் - (பிறவுயிரை) வருத்தும் சினமுடையவர்கள்.
இங்குக் கூறப்பெற்ற பதினான்கு தானைத் தலைவர் வேறு; முன்பு போரில் மடிந்தவர் வேறு;
ஆங்கிலம் · English translationAI
Translation
- The commanders, seven and seven more, with victories won
- across the seven and seven worlds, leaders of armies,
- bearing battle-axes and swords and gleaming tridents,
- with a fury that harries like tigers and lions.
What the poem says
The fourteen commanders of Karaṉ's army take their places. They have won victories in all fourteen worlds, lead great armies, carry axes, swords and tridents, and are as savage as tigers and lions.
The commentary again notes that these are different from the fourteen already killed.