கம்பராமாயணம் 3022 · ஆரணிய 6.65

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1குழை உறு மதியம் பூத்த கொம்பு அனாள் குழைந்து சோரத்
தழை உறு சாலை நின்றும் தனிச் சிலை தரித்த மேரு
மழை என முழங்குகின்ற வாள் எயிற்று அரக்கர் காண
முழையில் நின்று எழுந்து செல்லும் மடங்கலின் முனிந்து சென்றான் .

பொருள் · Meaning in Tamil

குழையுறு - காதணி பொருந்திய; மதியம் பூத்த - சந்திரனை மலராகப் பெற்ற; கொம்பு அனாள் - ஒரு பூங்கொம்பையொத்தவளான சீதை, குழைந்து சோர - தளர்ந்து வருத்தமடைய; தழை உறு சாலை நின்றும் - தழைகளால் அமைந்த அந்தப் பர்ணசாலையிலிருந்து; தனிச் சிலை தரித்த மேரு - ஒப்பற்ற வில்லையேந்திய மேரு மலையைப் போன்ற இராமன்; மழை என முழங்குகின்ற - மேகம்போல ஆரவாரிக்கின்ற; வாள் எயிற்று அரக்கர் காண - கூரிய பற்களையுடைய அந்த அரக்கர்கள் பார்க்கும்படி; முழையின் நின்று - மலைக் குகையிலிருந்து; எழுந்து செல்லும் மடங்கலின் - எழுந்து வெளியே செல்லும் ஆண் சிங்கம் போல; முனிந்து சென்றான் - கோபத்தோடு புறப்பட்டான்.

பர்ணசாலையிலிருந்து இராமன் புறப்பட்ட காட்சி மலைக் குகையிலிருந்து ஒரு சிங்கம் முழங்கி வெளியே புறப்படுவது போல உள்ளது என்றார் குழையுறு மதியம் பூத்த கொம்பு - இல் பொருளுவமை. குழையென்னும் அணியைப் பூண்ட முகம் முழு நிலவையும், அழகிய திருமேனி பூங் கொம்பையும் ஒத்திருப்பதால் இவ்வாறு கூறினார் மேரு - உவமையாகுபெயர் சிலை தந்த மேரு - இல்பொருளுவமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While she, a flowering branch that bloomed with an earringed moon, drooped and grew faint,
  2. from the leaf-thatched hut, a Mēru bearing a peerless bow,
  3. as the sharp-fanged rākṣasas roaring like thunderclouds looked on,
  4. he went out in wrath like a lion rising from its cave.

What the poem says

As Cītai droops with worry, Irāmaṉ strides out of the leaf hut to face the roaring, sharp-fanged rākṣasas, like a lion leaving its mountain cave.

Cītai is pictured as a flowering branch whose blossom is a moon wearing earrings, that is, her face. Irāmaṉ is a Mount Mēru carrying a bow. Both are images of things that could not exist.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuḻaiyuṟu matiyam pūtta kompaṉāḷ kuḻaintu cōra
taḻaiyuṟu cālainiṉṟum taṉic cilai taritta mēru
maḻai eṉa muḻaṅkukiṉṟa vāḷ eyiṟṟu arakkar kāṇa
muḻaiyiṉ niṉṟu eḻuntu cellum maṭaṅkaliṉ muṉintu ceṉṟāṉ.