கம்பராமாயணம் 3023 · ஆரணிய 6.66

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''

பொருள் · Meaning in Tamil

வான் தொடர் மூங்கில் தந்த - ஆகாயத்தையளாவி வளர்ந்த மூங்கில்கள் (உராய்வதால்) உண்டாக்கிய; வயங்கு வெம் தீ இது என்ன - விளங்குகின்ற கொடிய நெருப்பைப் போல; தான் தொடர் குலத்தை எல்லாம் - தான் பிறந்த குலம் முழுவதையும்; தொலைக்குமா சமைந்து நின்றாள் - அழிக்கும்படி அச் செயலில் பொருந்தி நின்ற சூர்ப்பணகை; தோன்றிய தோன்றல் தன்னை - வெளியே தென்பட்ட இராமபிரானை; சுட்டினள் காட்டி - சுட்டிக் காண்பித்து; ஏன்று வந்து எதிர்த்த வீரன் இவன் - போர் கோலம் பூண்டு வந்து எதிர்ப்பட்ட இந்த வீரனே; இகல் இராமன் என்று - (நம்மிடம்) பகைமை கொண்ட இராமன் என்று; சொன்னாள் - கூறினாள். ஏ - அசை

மூங்கிலில் பிறந்த தீ அந்த மூங்கில் தொகுதிகளையெல்லாம் எரித்தழிப்பது போல அரக்கர் குலத்திலே பிறந்த சூர்ப்பணகை அந்த அரக்கர் குலத்தையெல்லாம் பூண்டோடு அழிப்பதற்கு மூல காரணமாக இருந்தமையால் அவளை மூங்கிலிலிருந்து தோன்றும் நெருப்புக்கு உவமை கூறினார் சுட்டினாள் : முற்றெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Pointing out the hero who had appeared, she spoke,
  2. she who stood ready to destroy all the race she sprang from,
  3. like the bright fierce fire born from sky-high bamboos,
  4. "This warrior who has come out to face us is Irāmaṉ, our enemy."

What the poem says

Cūrppaṇakai points at Irāmaṉ and tells Karaṉ that this is the enemy.

She is compared to a forest fire sparked by bamboos rubbing together, which then burns up the whole bamboo grove: born a rākṣasī, she will be the root cause of the destruction of her entire race.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tōṉṟiya tōṉṟal taṉṉaic cuṭṭiṉaḷ kāṭṭic coṉṉāḷ;
vāṉ toṭar mūṅkil tanta vayaṅku ven tī itu eṉṉa
tāṉ toṭar kulattai ellām tolaikkumā camaintu niṉṟāḷ,
''ēṉṟu vantu etirnta vīraṉ ivaṉ ikal irāmaṉ '' eṉṟē.