கம்பராமாயணம் 3024 · ஆரணிய 6.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கதிரவன் கலங்கி நீங்க - பல ஆயிரம் கதிர்களையுடைய சூரியனும் கலக்கமுற்று நீங்கும்படி; கனகத் தேர்மேல் - பொன் மயமான தேரின் மேல்; விண்டனன் நின்ற - பகைத்து நின்ற; வென்றிக் கரன் எனும் - வெற்றியையுடைய கரன் என்கிற; விலங்கல் தோளான் - மலைகள் போன்ற தோள்களையுடைய அரக்க வீரன்; கண்டனன் - (இராமபிரானைக்) கண்டு; படைஞரைக் குறித்து - தன் படை வீரர்களை நோக்கி; 'யானே மண்டு அமர் செய்து - நான் ஒருவனே இந்தப் பெரிய போரைச் செய்து; இம் மானிடன் வலியை நீக்கி - இந்த மனிதனது ஆற்றலை அழித்து; வாகை கொண்டனென்' - வெற்றிமாலையைச் சூடுவேன்; என்று சொன்னான் - என்று கூறினான்.
தனிப்பட இராமன் ஒருவனே போர் செய்ய எதிரே நிற்பதால் அது கண்ட கரன் 'இவனை வெல்வதற்குத் துணையாக எனக்குச் சேனையோ துணைப் படையோ வேண்டா; நானே வெல்வேன் என்று எளிதாகக் கூறினான் என்பது.
விரையும் தெளிவும் பற்றிக் கொண்டனன் இறந்த காலத்தால் கூறினான்; காலவழுவமைதி. விண்டனன் கண்டனன் - முற்றெச்சங்கள். விண் : இடவாகுபெயர் விலங்கல் : மலை - தொழிற்பெயர் விலங்கல் தோள் : மலை போல வலிமையும் பெருமையும் கொண்டமையால்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He saw him: on his golden chariot, while the sun reeled and withdrew,
- victorious Karaṉ, standing high in the sky, with shoulders like mountains,
- said to his warriors, pointing, "I alone will fight this crowded war,
- break this man's strength and have won the garland of victory."
What the poem says
Karaṉ, standing in his golden chariot so high and fierce that the sun shrinks away, sees Irāmaṉ standing alone. He tells his troops he needs no army and no allies: he will fight this man by himself.
He says he has already won, using the past tense to show how certain and quick he expects the victory to be.