கம்பராமாயணம் 3026 · ஆரணிய 6.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அகம்பன் என்று அமைந்த - அகம்பன் என்று பெயர் கொண்ட, கல்விச் செவ்வியான் ஒருவன் - கல்விச் சிறப்புடைய ஓர் அரக்கன்; அவ் உரை கேட்டு வந்தான் - கரனின் அந்த வார்த்தைகளைக் கேட்ட அளவில் (அவன் அருகே) வந்து; 'ஐய - தலைவனே! வீரரில் ஆண்மை வீர் - வீரர்களுள் சிறந்த வலிமையுடைய வீரனே; செப்புவென் - நான் ஒரு செய்தியைச் சொல்லுவேன் (கேட்பாயாக); செருவில் சால வெவ்வியர் ஆதல் நன்று - 'போரில் மிகக் கடுமையுடையவராக இருப்பது இயல்பாக நல்லதுதான் (ஆனாலும்); இவ்வயின் - இந்த இடத்தில் (இப்பொழுது); தீய நிமித்தம் உள ஆம் - அழிவைக் காட்டிடும் தீய அறிகுறிகள் உண்டாகின்றன; என்று - என்று சொல்லி; இயம்பல் உற்றான் - (அக் கொடிய நிமித்தங்களைக் குறித்து) விரிவாகக் கூறத் தொடங்கினான், ஏ - அசை.
நூல் தெரிந்தவன் என்பது தோன்ற அகம்பனை 'அமைந்த கல்விச் செவ்வியான்' என்றார். அகம்பன் - போரில் சலனம் (நடுக்கம்) இல்லாதவன். நிமித்தம் - பின்னே வரும் பயன்களை முன்னே அறிவிக்கும் குறி, உற்பாதமாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Hearing those words, there came one called Akampaṉ, a man of
- fine learning: "Sir, I will speak; to be very fierce in battle
- is good indeed, you who are the manliest of heroes!
- but there are evil omens here," and he began to tell them.
What the poem says
A learned rākṣasa named Akampaṉ comes up to Karaṉ. He grants that ferocity in battle is a fine thing in a hero, but warns that there are bad omens all around, and begins to describe them.
His name means the unshaken one, and he is described as well read, which here means versed in reading signs.