கம்பராமாயணம் 3027 · ஆரணிய 6.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வீர - வீரனே!; மேகங்கள் குமுறி - மேகங்கள் முழங்கி; குருதி மா மழை சொரிந்தன - மிக்க இரத்த மழையைப் பொழிந்தன; பருதி வானவன் - சூரியனை; ஊர் வளைப்புண்டது - பரிவேடம் சூழ்ந்து கொண்டது; பாராய் - (அவற்றை) பார்ப்பாய்; காக்கையின் கணங்கள் - காக்கைக் கூட்டங்கள்; நின் கொடி மிசை - உன் கொடியின் மேல், பொருது வீழ்வன - சண்டையிட்டுக் கீழே விழுவனவாய், புலம்புவ - கதறியழுது கொண்டு; நிலம்படப் புரள்வ - தரையில் விழுந்து புரளுகின்ற; கருது - (இதனை நீ) மனத்திற் கொள்வாய்;
மேகங்கள் குமுறி, இரத்த மழை பொழிதலும், சூரியனைப் பரிவட்டம் சூழ்தலும், கொடி மேல் காக்கைக் கூட்டங்கள் சண்டையிட்டுப் புலம்பி நிலத்தில் புரளுதலும் ஆகிய தீ நிமித்தங்களைக் கரனுக்கு அகம்பன் சொன்னான் என்பது.
ஊர் - பரிவட்டம் : சூரியனைச் சுற்றித் தோன்றும் வட்டம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The clouds have rumbled and poured down a great rain of blood;
- look, the sun in the sky is ringed by a halo!
- Think on it, hero: on your banner flocks of crows
- fight and fall, wailing, and roll on the ground.
What the poem says
Akampaṉ lists the first omens: thunderclouds pouring rain of blood, a halo ringing the sun, and crows fighting on Karaṉ's banner, then dropping to the ground, crying and writhing. All are classic signs of disaster in battle.