கம்பராமாயணம் 3028 · ஆரணிய 6.71

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வாளின் வாய்களை - வாள்களின் வெட்டு வாய்களை; ஈ வளைக்கின்றன - ஈக்கள் சுற்றுகின்றன; வயவர் தோளும் நாட்டமும் - படை வீரர்களின் தோள்களும் கண்களும்; இடம் துடிக்கின்றன - இடப் பக்கமாகத் துடிக்கின்றன; மீளி மொய்ம்புடை இவுளி - வலிய தோள்களையுடைய சேனைத் தலைவரின் குதிரைகள்; தூங்கி வீழ்கின்றன - (போர் செய்யும் நிலையில்) தூங்கிக் கீழே விழுகின்றன; ஞாளியோடு நரிக்குலம் பல - நாய்களோடு பல நரிக் கூட்டங்கள்; விரவி நின்று - சேர்ந்து வந்து நின்றவாறு; உளைக்கின்ற - ஊளையிடுகின்றன; ஆல் - ஈற்றசை.

ஆயுதங்களின் வெட்டு வாய்களை ஈக்கள் சுற்றுவதும், வீரர்களின் தோள்களும் கண்களும் இடம் துடிப்பதும், குதிரைகள் தாமே தூங்கிவிடுவதும், நாய் நரிகள் ஊளையிடுவதும் தீ நிமித்தங்களாகும். உளைக்கின்ற - பலவின் பால் முற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Flies swarm around the edges of the swords; the warriors'
  2. left shoulders and left eyes twitch; drowsing,
  3. the horses of mighty strength are falling down; mingling
  4. with dogs, many packs of jackals stand and howl.

What the poem says

More omens: flies swarm around the sword blades, the soldiers' left shoulders and eyes twitch (a bad sign for men), the war horses drop asleep on their feet, and jackals and dogs howl together.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāḷiṉ vāykaḷai ī vaḷaikkiṉṟaṉa; vayavar
tōḷum nāṭṭamum iṭam tuṭikkiṉṟaṉa; tūṅki
mīḷi moympuṭai ivuḷi vīḻkiṉṟaṉa; viravi
ñāḷiyōṭu niṉṟu uḷaikkiṉṟa narik kulam palavāl.