கம்பராமாயணம் 3029 · ஆரணிய 6.72
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பிடி எலாம் - பெண் யானைகளெல்லாம்; மதம் பெய்திட - மதநீரைச் சொரிய; பெருங்கவுள் வேழம் - பெரிய கதுப்புகளையுடைய ஆண் யானைகளின்; மால் மருப்பு ஒடியும் - பெரிய தந்தங்கள் ஒடிந்து விழுகின்றன; உலகமும் கம்பிக்கும் - பூமியும் அதிர்ச்சியடைந்து நடுங்குகின்றது; உயர் வான் இடியும் - ஓங்கிய வானத்திலிருந்து இடிகளும், வீழ்ந்திடும் - மேலே விழும்; பெருந் திசை எரிந்திடும் - பெரிய திக்குகள் தாமே தீப் பற்றி எரிகின்றன; எவர்க்கும் - (அரக்கர்) எல்லோருக்கும்; முடியின் மாலைகள் - (தம்) தலையின் மேலே அணிந்த பூமாலைகள்; புலாலொடு முழு முடை நாறும் - புலால் நாற்றத்தோடு மிக்க கெட்ட நாற்றமும் வீசுகின்றன; ஆல் - அசை.
பெண் யானைக்கு இயற்கையில் மதம் இல்லை; ஆதலால் அவை மதநீர் பொழிதல் தீ நிமித்தமாகும். பெண் யானைகள் மதநீரைச் சொரிவதும், ஆண்யானைகளின் தந்தங்கள் ஒடிவதும், உலகம் நடுங்குவதும் இடிவிழுவதும், திசைகள் தீப் பற்றி எரிவதும், மாலைகள் துர்நாற்றம் வீசுவதும் தீ நிமித்தங்களாம்.
ஒடியுமால் மருப்பு - 'ஆல்' அசையுமாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The she-elephants all pour out musk, the great tusks
- of the big-cheeked bull elephants are snapping; the earth trembles; from the high sky
- thunderbolts fall; the wide quarters burst into flame; for everyone
- the garlands on their heads reek of raw flesh and utter rot.
What the poem says
Akampaṉ's list of omens goes on. Cow elephants, which never come into musth, are streaming musth fluid, and the bulls' tusks are snapping off.
The earth shakes, thunderbolts strike, the horizons blaze with fire, and the flower garlands on every warrior's head stink of rotting meat.