கம்பராமாயணம் 3030 · ஆரணிய 6.73
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இனைய ஆதலின் - இத்தகைய தீ நிமித்தங்கள் நிகழ்வனவாதலால்; இவனை மானிடன் ஒருவன் என்று - இவனை ஒரு (எளிய) மனிதனென்று; நினையல் ஆவது - துச்சமாக நினைப்பது; அது ஒன்று அன்று - பொருந்துவது ஆகாது; நீதியோய் - நீதியையுணர்ந்தவனே!; நின்ற வினை எலாம் செய்து - (நீ) போருக்குரிய தொழில்கள் எல்லாவற்றையும் செய்தாலும்; வெல்லல் ஆம் தன்மையன் அல்லன் - வெல்லக் கூடிய (அவ்வளவு) எளிமையுடையவனாக (அவன் இல்லை; புனையும் வாகையாய் - வெற்றி மாலையுடையவனே; என் உரை பொறுத்தி - (நான் கூறிய) என்னுடைய இந்த வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்வாய்; எனப் புகன்றான் - என்று (அகம்பன்) சொன்னான்.
இப்பொழுது நிகழ்ந்துள்ள தீநிமித்தங்களைப் பார்த்தால், நீ அரக்கர்களை அணிவகுத்துப் பெரும் போர் செய்தாலும் வெல்ல முடியாதவன் இராமனென்று தோன்றுகிறதென அகம்பன் கரனுக்கு எச்சரிக்கை செய்தான் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Since these things are so, to think of him as
- just one man is not right; you who know what is just!
- He is not one who can be beaten even if you do every deed of war that stands to be done;
- you who wear the garland of victory, bear with my words," he said.
What the poem says
Akampaṉ draws his conclusion. With such omens, Karaṉ must not dismiss Irāmaṉ as a mere man. Even if he throws every resource of war against him, he may not win.
He asks Karaṉ to forgive his frankness.