கம்பராமாயணம் 3031 · ஆரணிய 6.74
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உரைத்த வாசகம் கேட்டலும் - (இவ்வாறு) அகம்பன் கூறிய வார்த்தைகளைக் கேட்டவுடன்; உலகு எலாம் உலையச் சிரித்து - (கரன்) உலகங்கள் யாவும் நிலை தளர்ந்து நடுங்குமாறு சிரித்து; தேவரைத் தேய அரைத்த - தேவர்களைத் தேய்த்து உருத்தெரியாமல் அரைத்த; அம்மி ஆம் - அம்மிக்கல் என்னும்; அலங்கு எழில் தோள் - அசைந்து விளங்குகிற என் தோள்கள்; அமர் வேண்டி - போரினை விரும்பி; இரைத்து வீங்குவ - பூரித்துப் பெருத்துள்ளன; மானிடற்கு எளியவோ - (அத்தகைய தோள்கள்) ஒரு மனிதனுக்கு எளிமைப் படுவனவோ?; நம் சேவகம் நன்று - நமது வீரம் நன்றாயிருந்தது; என்றான் - என்று கூறினான்.
தான் முன்னர்ப் புயவலிமையால் தேவர் பலரை அழித்தமை குறித்துத் 'தேவரைத் தேய அரைத்த அம்மியாம் தோள்' என்றது. தேவர்களை எளிதில் அழித்த நாமோ இம் மனிதனுக்கு அஞ்சுவது? என்று அகம்பன் கூறியதை ஏளனஞ் செய்து கூறியவாறு.
நன்றிது : இது - அசைநிலை. இரைத்து வீங்கும் - ஒரு பொருட் பன்மொழி தோளாகிய அம்மிக்கு வலிமையைக் குழவியாகவும், தேவர்களை அரைக்கப்படு பொருளாகவும் கொள்ளுதல் வேண்டும்: ஏகதேச உருவகம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Hearing the words he spoke, he laughed so that all the worlds shook:
- "A fine thing, our valour! These handsome shoulders, the grinding stone
- that ground the gods to nothing, swelling and heaving
- in their longing for battle, are they easy prey for a man?" he said.
What the poem says
Karaṉ bursts out laughing so loudly that the worlds tremble. He mocks the warning: his shoulders are a grinding stone that once ground the gods to powder, and they are swelling with desire for a fight.
Are such shoulders to be afraid of a mere man? A fine sort of heroism that would be.