கம்பராமாயணம் 3032 · ஆரணிய 6.75

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்னும் மாத்திரத்தே'எறி பிடி 'என இடியா ,
மன்னர் மன்னவன் மதலையை வளைந்தன ; வனத்து ,
மின்னும் வால் உளை மடங்கலை முனிந்தன வேழம்
துன்னினால் எனச் சுடு சினத்து அரக்கர்தம் தொகுதி .

பொருள் · Meaning in Tamil

என்னும் மாத்திரத்து - என்று (கரன்) கூறிய அளவில்; வனத்து - காட்டிலே; மின்னும் வால் உளை மடங்கலை - ஒளி வீசும் தூய பிடரி மயிர்களையுடைய சிங்கத்தை; முனிந்தன வேழம் - கோபம் கொண்ட பல யானைகள்; துன்னினால் என - சூழ்ந்து நெருங்கினாற் போல, மன்னர் மன்னவன் மதலையை - தசரதச் சக்கரவர்த்தியின் குமாரனான இராமனை; சுடு சினத்து அரக்கர்தம் தொகுதி - கொதிக்கும் கோபத்தையுடைய அரக்கர்களின் கூட்டங்கள்; எறிபடை இடி என இடியா - தாக்குகின்ற படைக் கருவிகளை ஒன்றோடு ஒன்று வீசி இடி போன்ற முழக்கத்தைச் செய்து கொண்டு; வளைந்தன - சூழ்ந்தன.

இராமன் ஒருவனால் அரக்கர் கூட்டம் எளிதில் அழிவது குறித்துச் சிங்கத்தை யானைகள் வளைத்தலாகிய இல்பொருள் உவமை கூறினார்

அரக்கப் படை வீரர்க்கு யானைகளும், இராம பிரானுக்கு மடங்கலும் உவமைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The moment he said this, crashing their weapons together like thunder,
  2. they surrounded the son of the king of kings; as if in the forest
  3. angry elephants had closed in round a lion
  4. with a gleaming white mane, so did the host of rākṣasas burning with rage.

What the poem says

At Karaṉ's words the rākṣasa horde, burning with fury, closes round Irāmaṉ, son of the king of kings, clashing their weapons with a noise like thunder.

They are like angry elephants surrounding a lion with a shining mane. The image hints at the result: a lion is not afraid of elephants, and the horde will be easily destroyed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṉum māttirattu eṟi paṭai iṭi eṉa iṭiyā,
maṉṉar maṉṉavaṉ matalaiyai vaḷaintaṉa; vaṉattu,
miṉṉum vāl uḷai maṭaṅkalai muṉintaṉa vēḻam
tuṉṉiṉāl eṉac cuṭu ciṉattu arakkartam tokuti.