கம்பராமாயணம் 3033 · ஆரணிய 6.76
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வளைந்த காலையில் - (இவ்வாறு அரக்கர் படை இராமனைக் சூழ்ந்து கொண்ட போது; அவ் இராமன் கை வரி வில் வளைந்தது - அந்த இராம பிரானின் கையிலுள்ள கட்டமைந்த வில்லும் (அம்பு தொடுக்க) வளைந்தது; விளைந்த போரையும் - (அப்பொழுது) நிகழ்ந்த போரினைக் குறித்தும்; ஆவதும் - அதனால் ஏற்பட்ட முடிவு பற்றியும்; விளம்புதும் - கூறுவோம்; விசையால் - (இராமபாணங்களின்) வேகத்தால்; பாய் பரி - பாய்ந்து செல்லும் குதிரைகள்; புளைந்த புரண்டன - துளைபட்டனவாய்க் கீழே விழுந்து புரண்டன; உரும் இடிபட - பேரிடி விழுவதால், மால் வரை ஒடிந்து என்ன - பெரிய மலைகள் முறிபட்டாற் போல; புகர் முகப் பூட்கை - செம்புள்ளிகள் அமைந்த முகங்களையுடைய யானைகள்; உளைந்த - வருந்திக் கீழே விழுந்தன.
அரக்கர் சேனை இராமனை வளைந்து கொள்ளவே, அந்த இராமனின் கை வில்லும் வளைந்தது. அவ் வில்லிலிருந்து அம்பெறிந்த வேகத்தால் குதிரைகள் புரள, இடியால் முறிந்த மலைகளைப் போல யானைகள் வருந்தின என்பது. புளைந்த - முற்றெச்சம். பூட்கை - புழைக்கை என்பதின் மரூஉ; யானையைக் குறிக்கும் சொல்; அன்மொழித்தொகை. இச்சொல்லால் யானையைக் கம்பர் பின்னும் குறிப்பர் (5588, 5601, 5608) ஆவதும் - கால வழுவமைதி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When they closed around him, the banded bow in that Irāmaṉ's hand bent;
- we will tell of the battle that followed and what came of it: under the force of his arrows
- the leaping horses, pierced through, rolled over; the elephants with spotted faces
- collapsed in agony, like great mountains split by a thunderbolt.
What the poem says
As the rākṣasa army closes around Irāmaṉ, his bow bends in turn: the poet plays on the word 'bent', used both for the ring of enemies and for the drawn bow.
The poet announces that he will now tell the battle and its outcome. Horses fall, pierced through by the speed of the arrows, and elephants crash down like mountains split by lightning.