கம்பராமாயணம் 3039 · ஆரணிய 6.82

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கைகள் வாளொடு களம் படக் கழுத்து அறக் கவச
மெய்கள் போழ்படத் தாள் விழ மிக நெடு நிருதர்
செய்ய மாத் தலை சிந்திடத் திசை உறச் சென்ற
தையலார் நெடு விழி எனக் கொடியன சரங்கள் .

பொருள் · Meaning in Tamil

தையலார் நெடு விழி என - மகளிரின் நீண்ட கண்களைப் போல; கொடியன சரங்கள் - கொடுமையான இராமபாணங்கள்; நிருதர் வெருவிட - அரக்கர் அஞ்சிடுமாறு; கைகள் வாளொடு - அவர்களின் கைகள் பிடித்திருந்த வாள்களோடு; களம்பட - போர்க் களத்தில் அறுபட்டு விழ; கழுத்து அற - கழுத்துக்கள் அறுபட; கவச மெய்கள் போழ்பட - கவசமணிந்த உடல்கள் பிளவுபட; தாள் விழ - கால்கள் அற்றுவிட, செய்ய மாத்தலை சிந்திட - (அவர்களுடைய) சிவந்த பெரிய தலைகள் சிதறிவிழ; திசை உறச் சென்ற - (செய்து) திக்குகளின் எல்லையை அளாவ அப்பாற் சென்றன.

இராம பாணங்களுக்குத் தையலார் விழி உவமானமாயிற்று : உவமானத்தை உவமேயமாகக் கூறியதால்; எதிர்நிலையணி மகளிரின் கண்களைப் போன்று கூரியனவும், பெருந் துயரை விளைப்பனவுமான இராம சரங்கள், அரக்கரின் வாளேந்திய கைகளும் கால்களும் அற்று விழவும், கவசமணிந்த உடல்கள் பிளவுபடவும், கழுத்துக்கள் அறுபடவும், தலைகள் சிதறவும் செய்து திசையுறச் சென்றன என்றவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As hands fell on the field with their swords, necks were cut, armoured
  2. bodies split open, legs dropped, and the terrified nirutas'
  3. great red heads were scattered, the arrows sped to the ends of the earth,
  4. as cruel as the long eyes of young women.

What the poem says

Irāmaṉ's arrows cut off the rākṣasas' sword hands, necks and legs, split their armoured bodies and scatter their heads before flying on to the horizon.

The arrows are compared, surprisingly, to the long eyes of beautiful women: sharp, and causing terrible suffering. In love poetry it is women's eyes that are said to be arrows; here the comparison is turned round.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaikaḷ vāḷoṭu kaḷam paṭak kaḻuttu aṟak kavaca
meykaḷ pōḻpaṭat tāḷ viḻa veruviṭu nirutar
ceyya māt talai cintiṭat ticai uṟac ceṉṟa
taiyalār neṭu viḻi eṉak koṭiyaṉa caraṅkaḷ.