கம்பராமாயணம் 3038 · ஆரணிய 6.81

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காடு கொண்ட கார் உலவைகள் - வனத்தில் அடர்த்தியாகவுள்ள கரிய மரக் கிளைகள்; கதழ் எரி கதுவ - மூளுகின்ற நெருப்புப் பற்றிக் கொள்ள; சூடு கொண்டன என - சூடு பொருந்தின போல; அறுகுறை - தலையறுபட்ட முண்டங்கள்; தொடர் குருதி மீத் தோன்ற - வழிகின்ற இரத்தம் மேலே காணப்பட; ஆடுகின்றன - துடித்து ஆடுகின்றன; விண்மேல் ஓடுகின்றன அயில் அம்பு - (அரக்கர்களின் உடல்களையறுத்துவிட்டு) ஆகாயத்தின் மேல் விரைந்து செல்லுகின்ற கூரிய அம்புகள்; உயிரையும் தொடர்வன ஒத்த - (அரக்கர்களின் உடம்பையழித்து மனநிறைவு கொள்ளாமல் அவர்களின்) உயிரையும் ஒழிக்கத் தொடர்வன போன்றன.

தழையில்லாமல் மொட்டையாகவுள்ள மரக்கிளை தலையற்ற அரக்கர்தம் உடற்குறையையும், அதன் மேல் தீப் பற்றியெரிதல் அவ்வுடம்பிலிருந்து இரத்தம் பெருகி வருதலையும் போலும் என்றது தன்மைத் தற்குறிப்பேற்ற வணியாம். அவ்வாறு உடற்குறையான கவந்தம் ஆடுமாறு அரக்கர்களின் தலைகளையறுத்துச் சென்ற இராமனுடைய அம்புகள் ஆகாயத்தின் மேற் செல்பவை வீர சுவர்க்கத்துக்குச் சென்ற அரக்கர் உயிர்களையும் ஒழிப்பதற்குத் தொடர்வன போலும் என்றார் : இதுவும் தன்மைத் தற்குறிப்பேற்ற வணி.

குருதி எழுந்தமை இராம பாணங்கள் எழுந்தமைக்கு உவமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the dark bare branches of a forest caught by blazing fire
  2. and scorched, with streaming blood showing on top,
  3. the headless trunks danced; the sharp arrows sped up into the sky
  4. as though chasing after their lives as well.

What the poem says

Headless bodies keep jerking and dancing, blood spurting from their necks, like the black, leafless branches of a forest with flames licking at their tips.

The arrows that beheaded them fly on into the sky, as though not content with the bodies and chasing the rākṣasas' souls up to the warriors' heaven to finish them off too.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāṭu koṇṭa kār ulavaikaḷ kataḻ eri katuva
cūṭu koṇṭaṉa eṉat toṭar kuruti mīt tōṉṟa,
āṭukiṉṟaṉa, aṟukuṟai; ayil ampu viṇmēl
ōṭukiṉṟaṉa, uyiraiyum toṭarvaṉa otta.