கம்பராமாயணம் 3037 · ஆரணிய 6.80
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடி என்று உணரா - ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், இலக்கம், கோடி என்று கணக்கிட்டு அறிய முடியாதபடி; துன்று பத்திய - நெருங்கின வரிசையாகவுள்ள; சுடு சரம் - நெருப்புப் போன்ற கொடிய அம்புகளை; இராகவன் துரப்ப - இரகு குலத்தில் தோன்றிய இராமன் செலுத்த; சென்று - (அந்த அம்புகள்) பகைவர் மேல் சென்று; கொன்று - அவ்வரக்கர்களைக் கொன்று; பத்திரத் தலையின மலை - அம்புகளைத் தலையிற் கொண்ட பல மலைகள்; திரண்டு என்ன - திரண்டு கிடந்தன போல; பிணம் பெருங் குன்றம் - பெரிய பிணக் குவியல்களை; பத்தியில் குவித்தன - வரிசையாகக் குவிந்து கிடக்கச் செய்தன. அம்புகள் பொத்திய பிணக் குன்றுகளுக்கு அம்புகள் பாய்ந்துள்ள மலைகள் உவமையாம்.
பத்திரம் - அம்பு. நூறாயிரம் - இரட்டுற மொழிதல், நூறும் ஆயிரமும்; நூறாயிரம் (இலட்சம்) எனக் கொள்க. பத்திரத் தலையின் - மலைகளின் சிகரங்களை ஒத்தனவாக என்னலுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Past reckoning as one, ten, a hundred, a thousand, a crore,
- the burning arrows in close-packed rows that Irākavaṉ loosed
- went and killed, and heaped up in rows great hills of corpses,
- like mountains gathered together with arrows on their peaks.
What the poem says
Irāmaṉ, of Raghu's line, shoots arrows in rows so dense that no one could count them in ones, tens, hundreds, thousands or millions.
They kill the rākṣasas and pile their bodies in long rows, mountains of corpses bristling with arrows like hills with feathered peaks.