கம்பராமாயணம் 3036 · ஆரணிய 6.79
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சுடு சரம் - (இராமபிரான்) ஏவிய கொடிய பாணங்கள்; கருவி மாவொடு - கல்லணை பூண்ட குதிரைகளையும்; கார் மதக் கைம் மலைக் கணத்து - கரிய நிறத்தையும், மதத்தையுமுடைய மலை போன்ற யானைக் கூட்டங்களையும்; ஊடு உருவி மாதிரத்து ஓடின - ஊடுருவி அப்பாலே சென்று திசைகள் எங்கும் விரைந்து சென்றன; உதிரம் அருவி மாலையின் தேங்கினது - இரத்தம் அருவிகளின் ஒழுங்குபோலத் தேங்கி நின்றது; அவனியில் அரக்கர் - பூமியிலே அரக்கர்களின்; திரு இல் மார்பகம் திறந்தன - பொலிவற்ற மார்பிடங்கள் பிளவுபட்டன; சிரங்கள் துறந்தன - தலைகள் துணிக்கப்பட்டு (உடலைவிட்டு) நீங்கின;
அந்தப் போரில் இராமனின் கொடிய அம்புகள் குதிரைகளையும், யானைகளையும் ஊடுருவித் திசைகளெங்கும் ஓட, பூமியிலே அரக்கர்களின், மார்பகங்கள் பிளக்கப் படத் தலைகள் துண்டிக்கப்பட்டன; அப்போது உதிரம் அருவியொழுங்கு போல அம்பு பட்ட மிருகங்களின் உடலிலிருந்து பெருகியது என்பது கருவி : குதிரையின் மேலிருக்கை, தவிசு கல்லணை (குதிரைச்சேணம்.
மாவொடு, கணத்தொடு - உருபுமயக்கம். திருவின் மார்பகம் என எடுத்து - வீரத்திருமகளையுடைய மார்பு என்றும், இரு வில் என எடுத்து - மேலான ஒளியையுடைய என்றும் உரைக்கலாம்; மேலும், திரு இல் மார்பகம் - அரக்கர்களின் வெற்றித் திரு இல்லாத மார்பகம் எனலும் ஆம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Through the saddled horses and the herds of dark rutting elephants like hills
- the burning arrows passed and sped off to the horizons; blood
- pooled on the earth like rows of waterfalls; the rākṣasas'
- luckless chests split open, and their heads left them.
What the poem says
Irāmaṉ's arrows pass right through saddled horses and herds of black, mountain-sized elephants and fly on to the ends of the earth.
Blood pours down like chains of waterfalls and collects in pools on the ground. The rākṣasas' chests, from which the goddess of fortune has departed, burst open, and their heads fly off.