கம்பராமாயணம் 3035 · ஆரணிய 6.78
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தொடி துணிந்தன - தொடியென்னும் வீரவளைகள் துண்டு பட்டு விழுந்தன; தோளொடு தோமரம் துணிந்த - கைகளோடு தோமரம் என்னும் ஆயுதங்களும் துண்டாயின; கட களிறு அடி துணிந்தன - மத யானைகளின் கால்கள் துண்டிக்கப்பட்டன; அச்சொடு நெடுந்தேர் - பெரிய தேர்களின் அச்சுக்களோடு; கொடி துணிந்தன - கொடிகளும் துண்டிக்கப் பெற்றன; குரகதம் துணிந்தன - குதிரைகள் துண்டங்களாக வெட்டப்பட்டன; குல மா முடி துணிந்தன - கூட்டமாகிய (யாளி முதலான) மிருகங்களின் தலைகள் துண்டிக்கப் பெற்றன; முசலம் முளையொடு துணிந்தன - உலக்கைகள் தண்டாயுதங்களோடு துணிக்கப்பட்டன.
அச்சு - இருசு; முளையொடு - அடியோடு என்றும் பொருளுரைக்கலாம் தோமரம் - தண்டாயுதம் என்பர்; முளை முசலம் என்பது ஒரு வகை ஆயுதமாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Armlets were severed with the arms; javelins were severed;
- the feet of rutting elephants were severed; the axles of tall chariots
- and their flags were severed; horses were severed; the heads of the herds of beasts
- were severed; severed were the pestle-clubs along with the stakes.
What the poem says
The slaughter continues in the same hammering rhythm, now with the word 'severed'. Arms are cut off with their armlets, javelins, the legs of rutting elephants, chariot axles and banners, horses, the heads of the beasts that pull the chariots, and the pestle-clubs.