கம்பராமாயணம் 3044 · ஆரணிய 6.87
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அப்பொழுது) கவந்த பந்தங்கள் - தலையற்ற குறையுடல் தொகுதிகள்; களித்தன - கூத்தாடின; கைம் மலைகள் - யானைகள்; சிவந்து பாய்ந்த வெங் குருதியில் - செந்நிறமாகப் பெருகிய வெப்பமான இரத்த வெள்ளத்தில்; குளித்த - மூழ்கின; வன் கழுது - வலிய பேய்கள்; திருகிய சினத்தால் - கடுமையான கோபத்தால், நிவந்த வெம் தொழில் நிருதர்தம் - மேலோங்கிய கொடுஞ் செயலையுடைய அரக்கர்களின்; நெடுநிணம் தெவிட்டி - மிக்க கொழுப்பைத் தெவிட்டும்படி நிரம்ப உண்டு; உவந்த - மகிழ்ந்தன; உம்பர் - தேவருலகம்; உயிர் சுமந்து - (இறந்த அரக்கர்களின்) உயிர்களை மிகுதியாகத் தாங்கி; உளுக்கியது - (சுமையைப் பொறுக்க மாட்டாமல்) உடல் நெளிந்தது.
இராம பாணங்களால் அரக்கர் பெருந்திரளாக மடிந்து விழ, உடற் குறைகளாகிய கவந்தங்கள் கூத்தாட, பெருகிய இரத்தப் பெரு வெள்ளத்தில் யானைகள் மூழ்கின; பேய்கள் அரக்கர்களின் கொழுப்புகளைத் தின்று மகிழ்ந்தன; வீர சுவர்க்கம் செல்லும் அரக்க வீரர்களின் உயிர்களைத் தாங்க மாட்டாது தேவருலகம் உடல் நெளிந்தது என்பது. தெவிட்டுதல் : விரும்பப்படாது மிகுதல் உளுக்குதல் : நெளிதல்.
வேறு உரை : நிணந்தெவிட்டி உவந்த வன்கழுது - கொழுப்பினிடம் மிக்க விருப்பம் கொண்டு உண்டு மகிழ்ந்த பேய்க் கூட்டங்கள்; உயிர்சுமந்து - (அளவுக்கு அதிகமாக உண்டாதல் வயிறு பருத்த தம்முடைய உடம்பைச் சுமக்க முடியாமல்) பெருமூச்சு விட்டு; உம்பர் உளுக்கியது - ஆகாயத்தில் அசைந்து சென்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Masses of headless trunks danced; hill-like elephants were plunged
- in the hot blood that gushed out red; the strong ghouls,
- glutted on the abundant fat of the nirutas, high in their fierce deeds,
- rejoiced in their twisting rage; the heaven above sagged under the load of lives.
What the poem says
Headless bodies dance, elephants sink in the hot, red flood of blood, and fierce ghouls gorge on rākṣasa fat until they are sick of it.
Heaven itself buckles under the weight of so many souls arriving at once, since warriors killed in battle go to the heroes' heaven. The commentary also mentions another reading: the ghouls, too bloated to carry their own bellies, drift heavily through the sky.