கம்பராமாயணம் 3045 · ஆரணிய 6.88
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மருள் தரும் - மாயையைச் செய்கின்ற; களி வஞ்சனை - களிப்பும் வஞ்சனையுமுள்ள; வளை எயிற்று அரக்கர் - வளைந்த கோரமான பற்களையுடைய இராக்கதர்களின்; கருடன் அஞ்சுறு கண்மணி - கருடனும் காண அஞ்சும்படியான கண்களின் கருவிழிகளை; காகமும் கவர்ந்த - (இப்பொழுது) காக்கைகளும் பறித்தெடுத்தன; இருள் தரும் புரத்து இழுதையர் - இருளைப் போன்ற மிகக் கரிய உடம்பையுடைய வஞ்சகர்களிடம்; பழுது உரைக்கு - கேடு சொல்வதற்கு; எளிதோ - எளியது ஆகுமோ; அருள் தரும் திறத்து - கருணை செய்யும் தன்மையையுடைய; அறன் அன்றி - தருமமேயல்லாமல்; வலியது - வலிமையுடையது; உண்டாமோ - (உலகத்தில் வேறு) உள்ளதாகுமோ?
உயிர்களுக்குத் தருமத்தினும் மிக்க நன்மை தருவதும், அதருமத்தினும் மிக்க கேடு தருவதும் வேறு இல்லையாதலால் கொடியவரான அரக்கர் எளிதாக அழிவடைந்தனர் என்பது.
'அருள்தரும் திறத்து அறனன்றி வலியது உண்டாமோ' - இராமபிரானே வெற்றி பெற்றமையைத் தெரிவிப்பது : பிறிது மொழிதலணி. 'இருள் தரும் புரத்து இழுதையர் பழுது உரைக்கு எளிதோ' - வேற்றுப் பொருள் வைப்பணி. காகமும் - உம் : இழிவு சிறப்பும்மை. அறத்துக்கு அருள் மிக இன்றியமையாததால் 'அருள் தரும் திறத்து அறன்' எனப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The eyeballs of the curved-fanged rākṣasas, drunk on deceit and illusion,
- eyes that even Garuḍa feared, the crows too plucked out;
- is it easy to tell the ruin of the fools with bodies dark as night?
- Is there anything stronger than dharma, whose nature is to give grace?
What the poem says
The rākṣasas' eyes, so fierce that even Garuḍa, king of birds, was afraid of them, are now being pecked out by ordinary crows.
The poet steps back and comments: who could describe in full the ruin of these wicked, night-black deceivers? Nothing in the world is stronger than dharma, whose essence is compassion. Irāmaṉ's victory is dharma's victory.