கம்பராமாயணம் 3046 · ஆரணிய 6.89

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(இவ்வாறு அரக்கரையழித்து) பல் ஆயிரம் இருள் - மிகப் பலவாகிய இருளின் தொகுதியை; கீறிய பகலோன் என ஒளிரும் - பிளந்து அழித்த சூரியனைப் போல ஒளி வீசுகின்ற, வில்லாளனை - வில்லில் வல்லவனான இராமபிரானை; (மற்றும் பல அரக்கர்), முனியா - கோபித்து; வெயில் அயில் ஆம் என விழியா - ஒளியையுடைய வேலைப் போலக் கூர்மையாகக் கண் விழித்துப் பார்த்து; கண மா முகில் - கூட்டமாகிய பெரிய மேகங்கள்; கடை நாள் - யுக முடிவுக் காலத்தில்; கல் ஆர் மழை - கற்களைப் போன்ற மழை; விழுவன போல் - சொரிவது போலத் தோன்றுமாறு; எல்லாம் ஒரு தொடையா - எல்லா வகை அம்புகளையும் ஒரே தொடர்ச்சியாக; உடன் எய்தார் - சேர்த்து எய்து; வினை செய்தார் - போர்த் தொழிலைச் செய்தார்கள்.

பல்லாயிரம் இருள் போரில் இறந்துபட்ட பல்லாயிரம் அரக்கர்களுக்கும், பகலவன் இராமனுக்கும் கல் மழை அம்பு பொழிதலுக்கும் மேகக் கூட்டம் அரக்கர் கூட்டத்துக்கும் உவமை. முனியா, விழியா செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Raging at the bowman who shone like the sun that tore through many thousand darknesses,
  2. glaring with eyes like gleaming spears,
  3. as massed great clouds rain down hailstones on the last day,
  4. they shot all their arrows together in one stream and fought on.

What the poem says

More rākṣasas, furious, glare at Irāmaṉ with spear-sharp eyes and loose every arrow they have in one unbroken stream, like storm clouds raining hailstones at the end of the world.

Irāmaṉ shines like the sun that has torn through countless darknesses, the thousands of dark rākṣasas he has already killed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pal āyiram iruḷ kīṟiya pakalōṉ eṉa oḷirum
villāḷaṉai muṉiyā, veyil ayil ām eṉa viḻiyā
kal ār maḻai, kaṇa mā mukil kaṭaināḷ, viḻuvaṉapōl
ellām oru toṭaiyā uṭaṉ eytār; viṉai ceytār.