கம்பராமாயணம் 3055 · ஆரணிய 6.98
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பிறை வாள் எயிற்று - பிறைச் சந்திரனைப் போன்ற கோரப் பற்களையுடைய; அரக்கர் பலர் - (சேனைகளுடன் வந்த) அரக்கர்களில் அநேகம் பேர்; எய்தார் - (இராமன்மேல்) அம்புகளை எய்தார்கள்; பலர் எறிந்தார் - (வேல் முதலிய ஆயுதங்களை) வீசினார்கள்; (பலர்) மழு ஓச்சினர் - (பலர் மழுவென்னும் ஆயுதங்களைச் செலுத்தினார்கள்; பலர் எழுவால் பொய்தார் - பலர் வளைதடிகளால் தாக்கினார்கள்; பலர் புடைத்தார் - பலர் ஆயுதங்களால் அடித்தார்கள்; பலர் கிடைத்தார் - பலர் எதிர்த்து நெருங்கினார்கள்; பொருப்பால் மழை பெய்தார் - மலைகளையெடுத்து மழைபோலச் சொரிந்தார்கள் பலர்; எரி பிதிர்த்தார் - பலர் நெருப்பைக் கொட்டினார்கள்; பலர் வைதார் - பலர் வசை மொழிகளைக் கூறினார்கள்; பலர் தெழித்தார் - பலர் அதட்டியாரவாரித்தார்கள்; மலை ஆம் என வளைத்தார் - (இவ்வாறு செய்து யாவரும்) மலைகள் சூழ்ந்தாற் போல (இராமனைக் சூழ்ந்தார்கள்.
கிடைத்தார் - நெருங்கினர். பொய்தார் - (போர்க் கருவிகளைக் கொண்டு) விளையாடினார் என்றும் கொள்ளலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Many shot arrows, many hurled spears, some swung axes, many
- struck with iron bars, many battered, many closed in; with mountains
- they rained down, they scattered fire; the rākṣasas with crescent-moon fangs,
- many cursed, many bellowed, and like mountains they surrounded him.
What the poem says
The rākṣasas with fangs curved like the crescent moon attack Irāmaṉ in every way they can. They shoot arrows, hurl spears, swing axes, club him with iron bars, pound at him, close in, rain whole mountains on him, scatter fire, shout curses and threats.
They surround him like a ring of mountains.