கம்பராமாயணம் 308 · பால 6.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சேய்இரு விசும்பிடை - உயர்ந்த பெரிய வானத்திடத்தே; திரியும் சாரணர் - (நிகழ்ச்சிகளை ஆராய்ந்தறியத்) திரியும் தேவதூதர்கள்; நாயகன் இவன்கொல் என்று அயிர்த்து - நமது தலைவனான இந்திரன் இவன்தானோ என்று தயரதனைக் கண்டு சந்தேகித்து; நாட்டம் ஓர் ஆயிரம் இல்லை என்று - கண்கள் ஓராயிரம் காணப்படவில்லை என்றெண்ணி; ஐயம் நீங்கினார் - அவர்கள் கொண்ட சந்தேகம் நீங்கினாராக; தூயமெல் அரி அணை - தூய்மையும் மென்மையும் உடைய சிங்காதனத்திலே; பொலிந்து தோன்றினான் - பொலிவுற்று விளங்கினான்.
அரியணை: சிங்காதனம். சேய்+இரு: சேயிரு: உயர்ந்த பெரிய என்பது பொருள். சாரணர்: தூதுவர். நாயகன்: தலைவன். கொல்: ஐயத்தை உணர்த்தும். நாட்டம்: கண்கள். இந்திரன் கெளதம முனிவனது சாபத்தால் ஆயிரம் கண் பெற்றவன் என்பது அகலிகைப் படலத்துச் செய்தி. இரண்டு பாடல்களாலும் தயரதன் இந்திரனுக்கு ஒப்பானவன் எனக் கூறப்பட்டது. இந்திரனுக்கு ஆயிரம் கண்கள், தயரதனுக்கு இரண்டே என்பதைத் தவிர பிற செல்வம், அதிகாரம், அழகு, வலிமை இவற்றால் இந்திரனுக்கு ஒப்பானவன் தயரதன் என்பதை விளக்கி உரைத்தார் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He appeared in splendour on the pure, soft lion throne;
- the celestial wanderers who roam the high, vast sky
- wondered, 'Is this our lord?', then, 'He does not have
- a thousand eyes,' and their doubt was gone.
What the poem says
Seated on his throne, Tacarataṉ looks so like Intiraṉ that passing celestial messengers take him for their own king, until they notice he has only two eyes. Intiraṉ has a thousand, the result of the curse of the sage Kautama, a story told later in the Akalikai episode.
In every other respect, wealth, power, beauty and might, Tacarataṉ equals Intiraṉ.