கம்பராமாயணம் 307 · பால 6.1

Section பால காண்டம் / 6. கையடைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நனைவரு கற்பக நாட்டு நன்னகர் - அரும்புகள் விரிகின்ற கற்பக மரத்தை உடைய அமரர்கள் நாட்டு நல்ல நகரான அமராவதி நகரை; வனைதொழில் மதிமிகும் மயற்கும் - படைத்த தொழில் திறமும், அறிவும் மிகுந்த மயனுக்கும்; சிந்தையால் நினையவும் அரியது - மனத்தால் எண்ணிப் பார்க்கவும் இயலாததும்; விசும்பின் நீண்டது ஓர் - வான மளவும் உயர்ந்திருப்பதுமாகிய ஒரு; புனைமணி மண்டபம் - மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள மண்டபம்; பொலிய எய்தினான் - விளக்கமுறும்படி சேர்ந்தான்.

முந்திய பாடலில் குறிப்பிட்ட “அரசர்தம் பெருமகன்” என்பதே இங்குக் கூறப்பட்ட 'எய்தினான்' என்பதற்கு எழுவாயாகும். நனை: அரும்பு. நல்-நகர்: நன்னகர். இங்கு நன்மை என்பது புண்ணியம் எனும் பொருளின் வழங்குகிறது. மண்டபம்: அரசிருக்கை. பொலிதல்: சிறத்தல். மயன்: தெய்வத்தச்சன்.

அமரர்கள் நாடான விண்ணுலகுக்குத் தலைநகர் அமராவதி. அதனைப் படைத்த மயனுக்கும் நினைத்துப் பார்க்கமுடியாத சிறப்புடைய மண்டபம் என்பது கருத்து. 'மயன் வனைதொழில்' மதிமிகும் மயன் என்று சிறப்பிக்கப்படுகிறான். மண்டபம் மன்னனது வருகையால் பொலிந்தது என்பது கருத்து. வனை தொழில்: வினைத்தொகை. இப்பாட்டு உயர்வு நவிற்சியணியாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. to a jewelled hall, one that even Mayaṉ, so skilled
  2. in the craft that shaped the fine city of the land of the budding wish-granting tree,
  3. could not have conceived in his mind, reaching to the sky,
  4. he came, making it shine.

What the poem says

Tacarataṉ enters his throne hall, which towers to the sky. Even Mayaṉ, the divine architect who built Amarāvatī, the city of the gods where the wish-granting tree grows, could not have imagined it.

The hall shines all the more for the king's presence. The commentary identifies the verse's exaggeration as the figure of hyperbole (uyarvu naviṟci).

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naṉai varu kaṟpaka nāṭṭu nal nakar
vaṉai toḻil mati miku mayaṟkum cintaiyāl
niṉaiyavum ariyatu, vicumpiṉ nīṇṭatu, ōr
puṉai maṇi maṇṭapam, poliya eytiṉāṉ.