கம்பராமாயணம் 306 · பால 5.138

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரசர் தம் பெருமகன் - மன்னர் மன்னனாகிய தயரதன்; அகிலம் யாவையும் விரசுறு - உலகம் முழுதும் தன் நிழலில் வந்து சேர்வதாகிய; தனிக்குடை விளங்க - ஒப்பற்ற வெண்கொற்றக் குடை விளங்கவும்; வென்றி சேர் முரசு ஒலிகறங்கிட - வெற்றி மிகுந்த முரசின் ஒலி திரிந்து ஒலிக்கவும்; முனிவர் ஏத்துற - முனிவர்கள் எல்லாம் புகழவும்; கரைசெயல் அரியது - அளவிடற்கு அரிதாகிய; ஓர்களிப்பில் வைகும் நாள் - மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியவனாக வாழ்ந்திருந்த காலத்திலே.

இந்தப் பாட்டு சில பிரதிகளில் திரு அவதாரப் படலத்தின் இறுதிப் பாடலாக அமைந்துள்ளது. கையடைப் படலத்தின் தோற்றுவாயாகக் கூறப்படுவதாகும். அரசர்தம் பெருமகன்: சக்கரவர்த்தி. “அகிலம்” பரந்த என்னும் பொருளில் உலகைக் குறித்து நின்றது. சேர்தல். கரை: வரம்பு (அளவு). கரை என்னும் குறிப்பால் 'களிப்பு' கடல் என்னும் பொருளை ஏற்றது. 'நாள்' காலத்தை உணர்த்தும். “எய்தினான்” என்ற அடுத்த பாட்டோடு முடியும். மகிழ்ச்சியுடன் தயரதன் வாழ்தலைக் கூறியதாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While the great son of kings, his single umbrella shining
  2. so that the whole world gathered under it, the drums of victory
  3. resounding, the sages praising him,
  4. dwelt in a joy whose shore no one could reach,

What the poem says

A new chapter begins, Kaiyaṭaip paṭalam, 'the chapter of the entrusting', in which Tacarataṉ hands over Irāmaṉ and Ilakkuvaṉ to the sage Vicuvāmittiraṉ.

This verse, which some manuscripts place at the end of the previous chapter, sets the scene: Tacarataṉ ruling the whole world under his single umbrella, in a joy as boundless as the sea. The sentence continues in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aracartam perumakaṉ, akilam yāvaiyum
viracuṟu taṉik kuṭai viḷaṅka, veṉṟi cēr
muracu oli kaṟaṅkiṭa, muṉivar ēttuṟa,
karai ceyal ariyatu ōr kaḷippiṉ vaikum nāḷ.