கம்பராமாயணம் 3082 · ஆரணிய 6.125
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அம் சிறை அறுபதம் - அழகான இறகுகளையுடைய குளவி; தஞ்சு என அடைந்த கீடத்தை - அடைக்கலமாகத் தன்னிடம் சேர்ந்த புழுக்களை; தன் மயம் ஆக்கும் தன்மை போல - தன் வடிவமாகச் செய்யும் தன்மை போல; வள்ளல் தான் - அருள் வள்ளலாகிய இராமன் ஆனவன்; வஞ்சகத்து அரக்கரை வளைத்து - வஞ்சனை நிரம்பிய அரக்கர்களை வளைத்துக் கொண்டு; செந் சரத் தூய்மையால் - தன்னுடைய சிறந்த அம்புகளின் தூய்மையால்; தேவர் ஆக்கினான் - (அவர்களைத்) தேவராகுமாறு செய்தான்.
குளவி புழுக்களைப் பிடித்துக் கொட்டித் தன் வடிவமாக்குதல் போலத் தேவனான இராமன் அரக்கர்களைத் தேவர்களாக்கினான் என்பது. குளவி புழுக்களைக் கொண்டு சென்று கூட்டில் வைத்து அவற்றின் தலையில் அடிக்கடி கொட்ட அவை குளவியையே நினைந்து கொண்டிருப்பதால் அதன் வடிவமாக மாறிச் சிறகு முளைக்கப் பெற்றுப் பறந்து செல்லும் தன்மையையடையுமென்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Just as the fair-winged wasp turns the grub that has come to it
- as its refuge into its own form,
- the bountiful one surrounded the deceitful demons
- and, by the purity of his fine arrows, made them gods.
What the poem says
The slaughter is presented as grace. An old belief held that a wasp carries grubs to its nest and stings them on the head again and again; thinking only of the wasp, they turn into wasps themselves, grow wings and fly away.
In the same way Irāmaṉ, the generous giver, hems in the treacherous demons, and the purity of his arrows transforms them into gods.