கம்பராமாயணம் 3090 · ஆரணிய 6.133
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வில் இழந்தனன் என்னினும் - (அத் திரிசிரன்) வில்லையிழந்து விட்டானென்றாலும்; விழித்த வாள் முகத்தின் எல் இழந்திலன் - உறுத்துப் பார்க்கின்ற ஒளிமிக்க தனது முகத்தின் ஒளியை இழந்துவிடவில்லை; வெம் கதம் இழந்திலன் - கொடிய கோபத்தை இழந்தானில்லை; இடிக்கும் சொல் இழந்திலன் - இடி முழக்கம் போலப் பேசும் வீர வார்த்தைகளை இழந்தானில்லை; தோள் வலி இழந்திலன் - தோள்களின் வலிமையையும் இழந்தானில்லை; சொரியும் கல் இழந்திலன் - (இராமன்மேல்) பொழியும் கற்களை இழந்தானில்லை; கறங்கு எனத் திரிதல் இழந்திலன் - காற்றாடி போலச் சுழன்று திரிவதையும் விட்டுவிட்டானில்லை.
வில் ஒழிந்த பின்பும் அத் திரிசிரன் அச்சமின்றி வீரமொழிகளைப் பேசிக் கொண்டு, தான் ஒருவனே எல்லாப் பக்கமும் சுற்றி வந்து தோள் வலிமையால் கற்களையெடுத்து இராமன் மேல் சொரிந்தான் என்பது. கறங்கு: காற்றாடி. அவன் முகத்தில் ஒளி இழவாமையையும், மனத்தில் துணிவு இழவாமையையும் அறியக் கடத்தலை விளக்குவார் 'முகத்தின் எல் இழந்திலன்' என்றார். எல் - விளக்கம், ஒளி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Though he had lost his bow, he did not lose the light
- of his bright, glaring face; he did not lose his fierce rage; he did not lose
- his thundering words; he did not lose the strength of his arms; he did not lose
- the stones he showered; he did not lose his whirling about like a spinning top.
What the poem says
Without his bow, Tiricirā still does not give up. His face keeps its fierce glow, his anger and thunderous taunts continue, and his arms are as strong as ever.
He hurls stones down on Irāmaṉ and whirls about the sky like a pinwheel. The light in his face shows that his courage is undimmed. The verse is built on the repeated 'he did not lose'.