கம்பராமாயணம் 3094 · ஆரணிய 6.137

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கணத்தின் மேல் நின்ற வானவர் கை புடைத் தார்ப்பப்
பணத்தின் மேல் நிலம் குழி உறக் கால்கொடு பதைப்பார் ,
நிணத்தின் மேல் விழுந்து அழுந்தினர் சிலர் ; சிலர் , நிவந்த
பிணத்தின்மேல் விழுந்து உருண்டனர் உயிர்கொடு பிழைப்பார் .

பொருள் · Meaning in Tamil

கணத்தின் மேல் நின்ற வானவர் - (அரக்கர்களின் கால்கள் களத்தில் கிடந்த குடல்களில் சிக்கியதைக் கண்டு) கூட்டமாக வானத்தில் திரண்டு நின்ற தேவர்கள்; கைபுடைத்து ஆர்த்தார் - மகிழ்ச்சியோடு பரிகசித்துக் கைகொட்டி யாரவாரித்தார்கள்; சிலர் - சில அரக்கர்கள்; பணத்தின் மேல் நிலம் குழி உற - (ஆதிசேடனாகிய பாம்பின் படங்களின் மேலுள்ள பூமி குழிபடும்படி; கால் கொடு பதைப்பார் - (தங்கள்) கால்களைப் பதிய வைத்து விரைந்தோடினவர்களாய்; நிணத்தின் மேல் விழுந்து அழுந்தினர் - (அக் களத்தில் கிடந்த) கொழுப்பில் வழுக்கி விழுந்து (அந்தச் சேற்றிலே) அழுந்தினார்கள்; சிலர் - மற்றும் சிலர்; உயிர் கொடு பிழைப்பார் - உயிர் நீங்காதபடி காத்து கொண்டு பிழைத்தோட முயன்றவர்களாய்; நிவந்த பிணத்தின் மேல் விழுந்து உருண்டனர் - உயர்ந்து கிடந்த பிணங்களின்மேல் இடறி விழுந்து கீழே புரண்டார்கள்.

ஓடிச் செல்லும் அரக்கர்களின் உடற்பார மிகுதியையும் செல்லும் வேகத்தின் மிகுதியையும் இச் செய்யுள் விளக்குகின்றது. 'பணத்தின்மேனிலம் குலைவுறல்' - ஓடும் அரக்கரின் வேகத்தாலும் பளுவாலும் ஆகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The gods standing in throngs above clapped their hands and shouted;
  2. some, stamping their feet in panic so that the earth on the serpent's hoods was dented,
  3. fell into the fat and sank; some, trying
  4. to escape with their lives, tripped over heaped corpses and rolled.

What the poem says

The gods gathered in the sky clap and jeer as the demons flee. Some demons run so heavily and so fast that they press hollows into the earth, which rests on the hoods of the cosmic serpent Ātiśēṭaṉ.

Others slip on the fat spilled across the field and sink into the mire, while some, desperate to save their lives, trip over the piles of corpses and roll to the ground.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇattiṉ mēl niṉṟa vāṉavar kai puṭaittu ārttār
paṇattiṉmēl nilam kuḻiyuṟa kāl koṭu pataippār,
niṇattiṉmēl viḻuntu aḻuntiṉar cilar; cilar, nivanta
piṇattiṉmēl viḻuntu uruṇṭaṉar uyir koṭu piḻaippār.