கம்பராமாயணம் 3093 · ஆரணிய 6.136

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1திரிசிரா எனும் சிகரம் மண் சேர்தலும் , சிந்தி ,
நிருதர் ஓடினர் , தூடணன் விலக்கவும் நில்லார் ,
பரிதி வாளினர் , கேடகத் தடக்கையர் , பரந்த
குருதி நீரிடை , வார்கழல் கொழுங்குடர் தொடக்க .

பொருள் · Meaning in Tamil

திரிசிரா எனும் சிகரம் - திரிசிரன் என்னும் மலைச் சிகரம்; மண் சேர்தலும் - தரையில் விழுந்ததும்; தூடணன் விலக்கவும் நில்லார் - தூடணன் என்ற சேனைத் தலைவன் (தங்களைத்) தடுக்கவும் நில்லாதவர்களாய்; பருதி வாளினர் - கதிரவனைப் போல் ஒளி வீசும் வாட்படையையுடையவர்களும்; கேடகத் தடக்கையர் - கேடகங்களைப் பிடித்த பெரிய கைகளையுடையவர்களு மாகிய; செறிந்த நிருதர் - (முன்பு) நெருங்கி நின்ற அரக்கர்கள்; வார் கழல் - நீண்ட கால்கள்; பரந்த குருதி நீரிடை - பரவிய இரத்த வெள்ளத்திலுள்ள; கொழுங் குடர் - கொழுத்த குடல்களிலே; தொடக்க - மாட்டிக் கொண்டு தடை செய்ய; ஓடினர் - ஓடினார்கள். போரில் எதிர்த்து நிற்க முடியாமல் மிக அஞ்சி ஓடிப் போகின்ற நிலையிலும் சிலர்க்கு அவ்வாறு விரைந்து செல்ல முடியாதபடி தற்செயலாகத் தடை நேர்கின்ற விதியின் கொடுமை ஈற்றடியில் விளங்கும். கைகளில் படைக்கலம் இருந்தும் போர்க்குத் துணியாத அவர்களது ஆற்றலின்மையைப் புலப்படுத்துவதற்கு, 'பருதி வாளினர் கேடகத் தடக்கையர்' என்ற அடைமொழி கொடுத்தார் படைக் கலங்களையும் கை, கால் முதலிய உறுப்புகளையும் இழந்த நிலையிலும் போர்துறவர் வீரனாகிய திரிசிரனின் பெருமையை (3007, 3008) படைக்கலங்கள் இருந்தும் ஓடிய அரக்கர் சிறுமையொடு ஒப்பிட்டுணர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the peak called Tiricirā came down to earth, the crowded
  2. demons fled; though Tūṭaṇaṉ tried to stop them they would not stand,
  3. they with swords like the sun and shields in their great hands, while, in the spreading
  4. flood of blood, fat entrails tangled their long, anklet-bound legs.

What the poem says

Once Tiricirā, like a mountain peak, crashes to the ground, the demons who had crowded the field break and run. Their commander Tūṭaṇaṉ tries to halt them, but they will not stop.

They still carry swords bright as the sun and shields in their hands, which only shows their lack of nerve. As they flee, their legs catch in the entrails floating in the pools of blood. The reader is invited to contrast their cowardice with Tiricirā, who kept fighting even without weapons or limbs.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tiricirā eṉum cikaram maṇ cērtalum, ceṟinta
nirutar ōṭiṉar, tūṭaṇaṉ vilakkavum nillār,
paruti vāḷiṉar, kēṭakat taṭak kaiyar, paranta
kuruti nīriṭai, vār kaḻal koḻuṅ kuṭar toṭakka.