கம்பராமாயணம் 3092 · ஆரணிய 6.135

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அற்ற தாளொடு தோளினன் , அயில் எயிறு இலங்கப்
பொற்றை மா முழைப் புலால் உடை வாயினின் புகுந்து ,
பற்ற ஆதரிப்பான்தனை நோக்கினன் , பரியான் ,
கொற்ற வார் சரத்து ஒழிந்தது ஓர் தலையையும் குறைத்தான்

பொருள் · Meaning in Tamil

அற்ற தாளொடு தோளிலன் - கால்களும் கைகளும் அறுபட்டவனாகி; அயில் எயிறு இலங்க - (அதற்குப் பின்பும்) தன் கூரிய பற்கள் தோன்றுமாறு; பொற்றை மா முழைப் புலால் உடை வாயினின் - மலையின் பெரிய குகை போன்ற புலால் நாற்றம் வீசும் தன் வாயினால்; புகுந்து பற்ற ஆதரிப்பான்தனை - (தன் மேல்) விழுந்து தனை (இராமனைப்) பற்றி விழுங்க விருப்பமுற்ற அத் திரிசிரனை; நோக்கினன் - பார்த்து (இராமன்; பரிவான் - (அவன்மேல்) இரக்கங் கொண்டவனாய்; கொற்ற வார் சரத்து - வெற்றி தரும் தனது நீண்ட அம்பினால்; ஒழிந்தது ஓர் சிரத்தையும் குறைத்தான் - அறுக்கப்படாது எஞ்சியிருந்த ஒருதலையையும் துணித்தான்.

படைக் கருவிகளையிழந்தவனாய்க் கால் கைகளாகிய முக்கிய உறுப்புக்களும் அறுபட்டு நின்ற நிலையிலும் அவனது கொடுமை நீங்காமல் இராமனை விழுங்கிவிடக் கருதியவனிடம் இராமன் இரக்கப்பட்டு அவனது எஞ்சிய சிரத்தையும் துண்டித்து வீழ்த்தினான் என்பது. பொற்றை - மலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Without his severed legs and arms, his sharp fangs gleaming,
  2. he who longed to fall on him and seize him in a mouth like a vast mountain cave reeking of flesh,
  3. Irāmaṉ looked upon, and in pity
  4. with a long, conquering arrow cut off the one head that remained.

What the poem says

Even with his arms and legs cut off and all his weapons gone, Tiricirā will not give up his cruelty. Baring his sharp fangs, he tries to throw himself on Irāmaṉ and swallow him in a mouth like a reeking mountain cave.

Irāmaṉ looks at him with pity, and with one long arrow cuts off his last remaining head, ending his suffering.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟṟa tāḷoṭu tōḷilaṉ, ayil eyiṟu ilaṅka
poṟṟai mā muḻaip pulāluṭai vāyiṉiṉ pukuntu,
paṟṟa ātarippāṉtaṉai nōkkiṉaṉ, parivāṉ,
koṟṟa vār carattu oḻintatu ōr cirattaiyum kuṟaittāṉ