கம்பராமாயணம் 3102 · ஆரணிய 6.145

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

செம்பு காட்டிய கண் இணை - போரில் கோபத்தால் செம்பின் நிறம் போலச் சிவந்து தோன்றிய உங்கள் இரண்டு கண்களும்; பால் எனத் தெளிந்தீர்! - (அச்சத்தால்) பால் போல் வெளுத்துத் தெளிவடையப் பெற்றுள்ளீர்; குல மங்கையர்க்கு - நற்குலத்தில் பிறந்த உங்கள் மனைவியர்க்கு; வெம்பு காட்டிடை நுழைதொறும் - கொடிய காடுகளிடையே (நீங்கள் நுழைந்து ஓடும்போதெல்லாம்; வெரிந் உறப் பாய்ந்த - உங்கள் முதுகிலே நன்றாகப் பாய்ந்து தாக்கிய; கொம்பு காட்டுதிரோ - மரக் கொம்புகளாலாகும் புண்களைக் காட்டுவீர்களோ?; தட மார்பிடைக் குளித்த - (அன்றி) பெரிய மார்பிலே தைத்த; அம்பு காட்டுதிரோ - அம்புகளாலான புண்களைக் காட்டுவீர்களோ? (யாது செய்வீர்?)

அம்மா - இரக்கச் சொல். 'போர்க்குப் புறப்பட்டு வந்த நீங்கள் மீண்டு சென்று உங்கள் வெற்றியை எதிர் நோக்கும் மனைவியர்க்கு அப் போரில் மார்பிலே பட்ட புண்களைக் காட்டி மகிழ்வித்தலன்றோ சிறப்பு? பகைவனுக்கு அஞ்சி அடர்ந்த வனத்தில் நுழைந்தோடும் போது முதுகிலே மரக் கொம்பு பட்ட புண்ணைக் காட்டினால் இகழ்ச்சிக்கு இடனாகுமல்லவா?' என்கிறான். செம்பெனச் சிவத்தல் சினத்துக்கும் பால் என வெளிறித்தெளிதல் அச்சத்துக்கும் மெய்ப்பாடுகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Your pair of eyes that showed red as copper have turned clear as milk!
  2. Each time you plunge into the scorching forest, will you show
  3. the branches that struck deep into your backs? Or will you show
  4. the arrows sunk in your broad chests, to your noble wives? Alas!

What the poem says

Tūṭaṇaṉ continues: their eyes, copper-red with battle rage a moment ago, have turned pale as milk with fear. Red eyes are the outward sign of anger, pale ones of terror.

A warrior should go home and delight his waiting wife by showing the arrow wounds on his chest. What will these men show theirs: scratches on their backs from branches as they bolted through the thick forest? 'Alas' is an exclamation of mock pity.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cempu kāṭṭiya kaṇ iṇai pāl eṉat teḷintīr!
vempu kāṭṭiṭai nuḻaitoṟum, verin uṟap pāynta
kompu kāṭṭutirō? taṭa mārpiṭaik kuḷitta
ampu kāṭṭutirō? kula maṅkaiyarkku ammā!