கம்பராமாயணம் 3101 · ஆரணிய 6.144

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இங்கு ஒர் மானிடற்கு இத்தனை வீரர்கள் இடைந்தீர் ,
உம் கை வாளொடு புகழ் இழந்து ஊர் புகல் உற்றீர் ,
கொங்கை மார்பிடைக் குளிப்புறக் களிப்பு உறு கொழுங்கண்
நங்கைமார்களைப் புல்லுதிரோ ? நலம் நுகர்வீர் .

பொருள் · Meaning in Tamil

இங்கு ஓர் மானிடற்கு - இங்குப் போருக்கு வந்த தனி மனிதன் ஒருவனுக்கு; இத்தனை வீரர்கள் இடைந்தீர் - நீங்கள் இவ்வளவு வீரர்களும் பின்னிட்டு ஓடலானீர்கள்; உம் கை வாளொடு போய் விழுந்து - உங்கள் கையிலுள்ள வாட்படையோடு ஒருவர் மேல் ஒருவர் மோதிவிழுந்து கொண்டு; ஊர் புகலுற்றீர் - விரைந்து ஊருக்குள்ளே புகுந்து கொள்ள முற்பட்டீர்கள்; களிப்புறு - (அவ்வாறு ஒளிந்தது மட்டுமல்லாமல்) களிப்புக் கொண்டு; கொங்கை மார்பிடைக் குளிப்புற - தனங்கள் மார்பிலே அழுந்தும்படி; உம் கொழுங்கண் நங்கைமார்களை - மதர்த்த கண்களையுடைய உங்கள் மனைவியரை; புல்லுதிரோ - அணைப்பீர்களோ?

இத்துணை வீரர்களிருந்தும் படைக் கருவிகளை இழவாதிருந்தும், தனி ஒரு மனிதனுக்கு அஞ்சியோடி ஒளிக்க முற்பட்டு ஆண்மையிழந்த நீங்கள் நாணமின்றி எவ்வாறு உங்கள் மனைவியரைச் சேர்விரென்று இகழ்ந்தான் என்பது. அதுவல்லாமலும் உங்களது ஆண்மை பகைவன்முன் நின்று பொருது வெல்லுவதற்கு அமையாமல் உங்கள் மனைவியரைத் தழுவுவதற்கே யமைந்தது என்ற இகழ்ச்சிக் குறிப்பும் தோன்றும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So many warriors, you have given way here before a single man;
  2. falling over one another with the swords in your hands you rush to enter the town;
  3. will you embrace your wives with their rich, joyful eyes
  4. so that their breasts sink into your chests? Enjoy your pleasures, then!

What the poem says

Tūṭaṇaṉ goes on taunting. So many warriors, still armed, have run from one lone man and tumble over each other with their swords to get back into the town.

How, he asks, can they shamelessly go home and embrace their wives? The sneer implies their manhood is good only for the bedroom, not for standing before an enemy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṅku or māṉiṭaṟku ittaṉai vīrarkaḷ iṭaintīr,
um kai vāḷoṭu pōy viḻuntu ūr pukaluṟṟīr,
koṅkai mārpiṭaik kuḷippuṟak kaḷippuṟu koḻuṅ kaṇ
naṅkaimārkaḷaip pullutirō? nalam nukarvīr.