கம்பராமாயணம் 3104 · ஆரணிய 6.147
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெறிப் போர் - மூர்க்கச் செயலை மேற் கொண்ட போரில்; தீர வாழ்க்கையின் - வீரத்தோடு கூடிய வாழ்வினால்; தேவரைச் செருவிடைப் பறித்த - தேவர்களிடமிருந்து போரில் பறித்துக் கொண்ட; வீர வாள் கையீர் - வலிமையுள்ள வாளைக் கையில் ஏந்தியவர்களே!; (போரில் தோற்றோடிப் போர்த் தருமத்தையிழந்த நீங்கள் போர்த் தொழிலை விட்டு); ஆர வாழ்க்கையின் வணிகராய் அமைதிரோ - இனி முத்து முதலிய பண்டங்களை விற்று வாழும் வணிகர்களாக அமைவீர்களோ? (அல்லது); அயில் வேல் வீர வாள் - (உழவராகிக்) கூர்மையான வேலையும், வலிமையுள்ள வாளினையும்; கொழு என மடுத்து உழுதிரோ - ஏரின் கொழுவாக மண்ணில் ஆழ்த்தி உழுது பயிரிடப் போகிறீர்களோ?; எங்ஙனம் வாழ்திரோ - எவ்வாறு வாழப் போகின்றீர்கள்? விளம்பீர் - சொல்லுங்கள்.
இவ்வாறு போரில் தோற்றோடி வெட்கங் கெட்ட உங்களுக்குப் போர் வீரராக வாழ வகையில்லை: இனி, நீங்கள் பண்டங்களை விற்று வாழும் வணிகராகவோ, உழுதுண்டு வாழும் வேளாளராகவோ வாழ்வதே உங்களுக்கு அமைவது என்றான்.
கையீர் - விளி; ஓ - ஐயம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Will you settle down as merchants living by trade in pearls? Will you thrust
- your sharp spears and hero's swords in like ploughshares and plough? You whose hands hold
- hero's swords snatched from the gods in battle, in a life of courage
- in furious war, how will you live now? Tell me!
What the poem says
Tūṭaṇaṉ ends with scorn. These are the warriors whose swords were once seized from the gods in fierce battle. Having run away and lost a warrior's honour, how will they make a living now?
Perhaps they will become merchants selling pearls, or farmers using their spears and swords as ploughshares. In his view, men who flee from battle are fit only for trade or the plough.