கம்பராமாயணம் 3105 · ஆரணிய 6.148
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்று - இவ்வாறு தூடணன் கூறி; 'நீர் இறை நின்று - நீங்கள் சிறிது நேரம் ஓடாது நின்று; என் நெடுஞ் சிலை வலி - எனது நீண்ட வில்லின் வலிமையை; காண்டிர்' என - காண்பீர்களாக என்று சொல்லி; தானும் தன் எறிகடல் சேனையும் - தானும் தன்னுடைய அலை வீசும் கடல் போன்ற சேனையுமாக; நேராச் சென்று தாக்கினன் - (இராமனுக்கு) எதிராகச் சென்று போர் செய்தான்; (அந்த உக்கிரத்தைக் கண்டு); தேவரும் மருள் கொண்டு திகைத்தார் - தேவர்களும் மயக்கமுற்றுப் பிரமித்தார்கள்; இராமனும் - இராமபிரானும்; 'நன்று காத்தி' என்று - (உன் சேனையை) நன்றாகக் காத்துக் கொள் என்று சொல்லி; எதிர் செல நடந்தான் - (அவனுக்கு) எதிராக நடந்து சென்றான்.
திகைத்தல் - இன்னது செய்வது என்று தீர்மானிக்க முடியாமல் பிரமித்து நிற்றல். நன்று காத்தி: திறமையுண்டேல் என்னை எதிர்த்து நின்று உன்னையும் உன் சேனையையும் காப்பாற்றிக் கொள் என்று பெருமிதத்தோடு கூறிய வீர மொழி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying this, he and his army like the surging sea, saying, 'Stand a moment,
- and see the strength of my long bow,'
- went straight on and attacked; even the gods were bewildered and stunned;
- and Irāmaṉ, saying, 'Guard yourself well,' walked out to meet him.
What the poem says
His speech over, Tūṭaṇaṉ tells the demons to stand for a moment and watch what his long bow can do. Then he and his army, vast as a surging sea, charge straight at Irāmaṉ, and even the gods are stunned by its ferocity.
Irāmaṉ walks out to meet him, saying, 'Guard yourself well': a proud warrior's challenge, meaning protect yourself and your army if you are able.