கம்பராமாயணம் 3107 · ஆரணிய 6.150

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

துரந்த - (இராமபிரானால்) செலுத்தப்பட்ட; சுடுசரம் - கொடிய அம்புகள்; உயிர்நிலை துருவி ஓடின - (அரக்கர்களின் உடம்பில்) உயிர் நின்ற இடங்களைத் தேடிக் கொண்டு விரைந்து சென்றன (வேறு சில அம்புகள்; கச்சையும் கவசமும் கழல - அரக்கர்களின் இடைக்கச்சும் உடற்கவசமும் கழன்றமையால்; கருவி ஓடின - படைக் கலங்கள் விரைந்து பாய்ந்தன (இன்னும் சில அம்புகள்); அழி குருதி ஆறு - (அவர்களின் உடல்கள்) சிதைந்ததனாலாகிய இரத்த நதிகள்; அருவி ஓடின என ஒழுக - மலையருவிகளாக ஓடின போல இடையறாது பெருகுமாறு; கேடகத் தட்டொடும் - (கையில் பிடித்த) கேடகம் என்னும் தட்டையும்; உடலம் - அவர்களுடம்பையும்; உருவி ஓடின - உள்ளே துளைத்து அப்பாற் சென்றன.

சுடுசரம் கழல, அலைப்ப உருவி ஓடின என வினைமுடிவு அமையும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The burning arrows sped, seeking out the seats of life; the shafts he loosed
  2. sped on, so that belts and armour fell away;
  3. they sped through, so that rivers of spilt blood flowed like running waterfalls,
  4. piercing bodies together with the flat shields.

What the poem says

Irāmaṉ's arrows seem to hunt for the vital spots where life resides. Some strip off the demons' belts and armour; others pass clean through their shields and bodies and out the other side.

The blood pours from the shattered bodies in unbroken streams, like waterfalls running down a mountain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1turuvi ōṭiṉa uyir nilai cuṭu caram; turanta
karuvi ōṭiṉa kaccaiyum kavacamum kaḻala
aruvi ōṭiṉa eṉa aḻi kuruti āṟu oḻuka
uruvi ōṭiṉa kēṭakat taṭṭoṭum uṭalam.